சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சனி.. குட்நியூஸ் வரப்போகுது

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

sani-vakra-peyarchi-2026-these-4-zodiac-signs-will-receive-saturns-blessings-and-major-positive-ch

சனி வக்ர பெயர்ச்சி

அந்த வகையில், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம்

சிம்ம ராசி, சிம்ம லக்னத்தினருக்கு கண்ட சனி காலத்தில் எப்படிப்பட்ட நிலை இருந்ததோ, மீண்டும் அதேபோன்ற ஒரு காலம் அடுத்த 138 நாட்களுக்கு உருவாகியுள்ளது. கண்டக சனி உடல்நலத்தை கெடுக்கும். மனநலத்தை கெடுக்கும். யார் நல்லவர், கெட்டவர், யாரை நம்புவது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படும். மாய சிந்தனைகள், மனகுழப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சனி பகவான் உங்கள் ராசியை பார்த்து கொண்டிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், திட்டினாலும் கவலைப்படாமல் கடந்து செல்ல வேண்டும். வசைபாடுபவர்களிடம் உண்மையை விளக்க சென்றால் அது இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே எதைப்பற்றியும், யாரின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். சனி பகவான் நான்காம் இடத்தை பார்க்கிறார். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

முதியோருக்கு ஜீரண பிரச்சனை, மூட்டு வலி, பசியின்மை போன்றவை அதிகரிக்கும். வருகிற டிசம்பர் மாதம் வரை உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கை வேண்டும். உணவு பழக்கத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சனி பகவான் ஒன்பதாம் இடத்தையும் பார்க்கிறார். பிரச்சனைகளுக்கு கோயில் சென்றால், அங்கு தரிசனம் கூட சரியாக அமையவில்லை என்று புலம்பும் நிலை ஏற்படும். சந்தர்ப்பம் கைமீறி செல்லும்.

சிம்ம ராசியினர் கடந்த இரண்டரை வருடங்களாகவே பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகளை கடந்து வந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த 138 நாட்களை கடப்பது பெரிய விஷயமல்ல. உங்களின் மனவலிமையால் இதையும் எளிதாக கடக்க முடியும். மனதுக்கு பொறுமை அவசியம். ஓய்வு எடுங்கள். நடப்பதை வேடிக்கை பாருங்கள். எதற்கும் கருத்து சொல்ல வேண்டியதில்லை. வீட்டு அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவதும், தினசரி கந்தசஷ்டி கவசம் கேட்பதம் நேர்மறையான சிந்தனைகளை வளர்க்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு சனி பகவான் 5 ஆம் இடத்தில் இதுவரை இருந்தார். இப்போது வக்கிர கதியாவதால் 138 நாட்களுக்கு 4 ஆம் இடத்துக்கான பலன்களை கொடுக்கப் போகிறார். படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, மனை, கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு செட்டிலாகும் யோகம் உண்டாகும். சனி 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரைக்கும் இருந்து வந்த எதிரிகள் ஒழிவார்கள்.

கடன்களை கட்டக்கூடிய யோகம் உண்டாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். இடமாற்றங்கள் உண்டாகும். வேறு ஊர்களுக்கு, வேறு இடங்களுக்கு, வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு சுய தொழில், சொந்த தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும். சொந்த தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

புதிய கிளைகளை தொடங்கும் யோகம் உண்டாகும். கூடுதலாக 10 பேருக்கு வேலை போட்டு கொடுக்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். நில, புல ஆதாயங்கள் கிடைக்கும். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள் மூலமாக ஒத்தாசைகள் உண்டாகும். சனி பகவானுடைய அடுத்த பார்வை 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் இயக்குபவர்கள் அது சார்ந்த தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசி, தனுசு லக்னத்தினருக்கு மிகவும் அற்புதமான அமைப்பு உருவாகியுள்ளது. சனி பகவான் நான்காம் இடத்தில் இருந்தார். இப்போது அவர் வக்ர நிலையில் மூன்றாம் இடத்தில் இருந்து அடுத்த 138 நாட்களுக்கான பலன்களை வழங்குவார். சனி மூன்றாவது இடத்தில் இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். சனி, செவ்வாய் மூன்று, ஆறு, ஒன்பதாம் இடங்களுக்கு வந்தால் முடிசூடா சக்ரவர்த்தி என்றழைப்பார்கள். நீங்களே எதிர்பாராதளவுக்கு வெற்றிகள் குவியும்.

அடுத்தடுத்து வெற்றிகள் வந்து குவியும். எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வியே தெரியாதளவுக்கு ஜெயம் உண்டாகும். போட்டி பொறாமையின்றி எளிதாக வெற்றி பெறுவீர்கள். மனதில் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். உழைப்பு, சம்பாதிப்பு எல்வாற்றையும் தெளிவாக திட்டமிட்டு சாதிப்பீர்கள். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பீர்கள். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்களால் பலனடைவீர்கள். உங்களால் அவர்களுக்கும் ஆதாயமுண்டு.

உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இட மாற்றம் நிச்சயம் உண்டு. வெளி மாநில, வெளி நாடு வாய்ப்புகள் நிச்சயம் வரும். பண வரவு அதிகரிக்கும். வீண் விரயங்கள் குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கடன் சுமை வெகுவாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். கவலைப்பட எதுவுமில்லை.

பெற்றோர் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். தாய் வழி உறவுகளில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. குல தெய்வ வழிபாடு அற்புதமான பலன்களை கொடுக்கும். இந்த 138 நாட்களில் ஒருமுறையாவது குடும்பத்தினருடன் குல தெய்வ கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு ஏழரை சனி முடிந்து விடுதலை பெற்றிருப்பீர்கள். இப்போது வக்கிர சனி ஏற்பட்டுள்ளதால் வரும் 138 நாட்களுக்கு ஏழரை சனி பாதிப்புகளை காணும் அமைப்பு உள்ளது. ஜூலை 26 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பதால் உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. உங்களுக்கு ராசிநாதனே சனி பகவனாக இருப்பதால் மிகப்பெரிய துன்பங்கள், துக்கங்கள் ஏற்படாது.

ஆனால், சனி பார்க்கும் இடங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு விரக்தி மனப்பான்மை, கோபத் தன்மைகள், படிப்பில் வெறுப்பு, ஆசிரியருடன் ஒத்துப் போகாத தன்மைகள் ஏற்படும். சகோதர வர்க்கங்கள் எனும் இளையவர்கள் மூலமாக தொல்லைகள் வரும். உங்கள் கருத்தால் அவர்கள் விலகிச் செல்லும் வாய்ப்புள்ளதால், வாக்குவாதம், வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பல வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண தடை பரிபூரணமாக நீங்கும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். இளையவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி, குடும்ப உறவில் இணக்கமாகச் செல்வது நல்லது. பெரிய பாதங்கள் இந்த காலத்தில் ஏற்படாவிட்டாலும், அவரவர் பாதையில் செல்லட்டும் என்றும் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+