பவானி ஆற்றில் அணை கட்டக் கூடாது: கேரள அரசுக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை:
பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வர் அந்தோணிக்குதமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கேரளாவில் பாய்ந்து, பின்னர் மீண்டும் தமிழகத்துக்குள் வரும்நதி பவானி.
இந்த ஆற்றின் குறுக்கே பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலி என்ற இடத்தில் அணையைக் கட்டகேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வருக்கு ஜெயலலிதாஎழுதியுள்ள கடிதத்தில்,
பவானி ஆற்றில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பவானி ஆற்று நீர் வருவது தடுக்கப்படும்.
மேலும் இந்த அணை கட்டப்பட்டால், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் 3 லட்சம்ஹெக்டேர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதிவருகின்றனர்.
எனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டம் முயற்சியை கேரள அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும் காவிரி ஆணையத்தின் அனுமதி பெறாமாலும் அணையைக் கட்டக் கூடாது. காவிரி நடுவர் நீதிமன்றத்தின்இறுதித் தீர்ப்பு கூட இன்னும் வழங்கப்படவில்லை.
அதற்குள் சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழகத்தின் அனுமதியைக் கூட கேட்காமல் பவானியில் அணை கட்டமுயல்வது தவறு என்று அக்கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் நிலை படுமோசமாகிவிடும் என்பதால் அணை கட்டும்திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால்ஜி என்பவர் ஏற்கனவே வழக்குதொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு தொடர்பாக மத்திய, தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications