கருணாநிதி மிரட்டலுக்குப் பயப்பட மாட்டோம்: பா.ஜ.க.
சென்னை:
இந்துத்துவா கொள்கையை பா.ஜ.க. தொடர்ந்து கடைப்பிடித்தால், கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று திமுகதலைவர் கருணாநிதி மிரட்டியுள்ளதைக் கண்டு பயப்பட மாட்டோம் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறினார்.
சென்னையில் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி நடந்த மருத்துவ முகாமைத் துவக்கி வைத்த பின்னர்நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்துத்துவா என்பது ஒரு கொள்கையோ, மதமோ அல்ல. அது நமது வாழ்க்கை. பரந்த மனப்பான்மையின் மறுபெயர்தான் இந்துத்துவா. இந்தக் கொள்கையை யாருக்காகவும், எதற்காகவும், எந்தக் காரணத்தைக் கொணடும்பா.ஜ.க. கைவிடாது.
இந்துத்துவாவைக் கைவிடாவிட்டால் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று கருணாநிதி கூறியுள்ளதைக் கண்டுபயப்பட மாட்டோம். தொடர்ந்து அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், இருப்போம்.
பா.ஜ.க. இந்து ஆதரவு கட்சி, இஸ்லாமிய, கிறிஸ்தவ எதிர்ப்பு கட்சி என்ற சித்திரத்தை உருவாக்கி விட்டார்கள்.
எனவே ஏதோ திமுகதான் இந்த சமுதாயத்தைக் காப்பது போல பிரமையை உருவாக்கும் பொருட்டு அவ்வப்போதுஇதுபோல ஏதாவது கூறிக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் கூறியதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படக் கூடும். இப்போதுள்ள அணிகள்அப்போது நிச்சயம் இருக்காது. வலுவான கட்சியாக உள்ள பா.ஜ.க. வலுவான, மக்கள் செல்வாக்குடன் உள்ளகட்சியுடன்தான் கூட்டணி சேரும் என்றார் கணேசன்.
-->
-
Annamalai Delhi Trip LIVE: தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பாஜக தேசிய தலைவருடன் சந்திப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications