மோடி ஸ்டைல் அரசியல் வேண்டாம்: ஜெ.வுக்கு இளங்கோவன் எச்சரிக்கை
சென்னை:
நரேந்திர மோடி ஸ்டைலில் அரசியல் நடத்த நினைக்கும் ஜெயலலிதாவின் திட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்காதுஎன்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சோனியாகாந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை மயிலாப்பூரில் குழந்தைகளுக்கு இலவச உடை வழங்கும்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளங்கோவன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்துத்துவா கொள்கையை வலியுறுத்துவதன் மூலமும், பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து செயல்படுவதன்மூலமும் அடுத்த தேர்தலிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். ஆனால்அவரது அரசியல் ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது.
குஜராத்தில் நரேந்திர மோடி செய்தது போல தமிழகத்திலும் மத வெறியைத் தூண்டி விட்டு, இந்துத்துவாகொள்கையை கட்டவிழ்த்து விட ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் அது நடக்காது. மீறி நடத்த முயற்சித்தாலும்அவர் வீழ்ச்சியைத்தான் சந்திப்பார்.
தமிழக மக்களிடையே மத நல்லிணக்கத்தை குலைத்து, அவர்களை மத ரீதியாக பிளவுபடுத்த ஜெயலலிதா முயற்சிசெய்கிறார். அதில் அவர் வெற்றி பெறப் போவதில்லை.
கருணாநிதியை வாசன் சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை. முரசொலி மாறன் உடல் நலம் குறித்துவிசாரிக்கத்தான் கருணாநிதியின் வீட்டுக்குப் போனதாக வாசனே கூறியுள்ளார்.
மதவாத பா.ஜ.க.வுடன் திமுக உறவை முறித்துக் கொள்ளாத வரையில் அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசமுடியாது.முதலில் அவர்கள் கூட்டணியிலிருந்து வெளியே வரட்டும். பிறகு நடக்க வேண்டியது நடக்கும்.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தெளிவாகக்கூறியுள்ளது.
திராவிடக் கட்சிகளுக்கு சரியான மாற்று சக்தியாக வேகமாக உருவெடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி என்றார்இளங்கோவன்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications