நாகப்பா டைரியில் தோண்டத் தோண்ட தகவல்கள்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் பல அரசியல்வாதிகளுக்கும், கிரானைட் அதிபர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துகர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா தன் டைரியில் சங்கேத மொழியில் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுக்குள் நாகப்பாவின் உடல் கிடந்த இடத்திற்கு அருகிலேயே அவருடையடைரியும் கிடைத்தது.
அந்த டைரியில் தன் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதியுள்ள நாகப்பா, "ரூ.40 கோடி, வயர்லெஸ் செட்" போன்றசில வார்த்தைகளையும் எழுதியிருந்தார்.
இதுபோன்ற பல சங்கேத வார்த்தைகளையும் தன் டைரியில் ஆங்காங்கே எழுதியுள்ளார் நாகப்பா. அது குறித்தவிவரங்களைப் போலீசார் படிப்படியாக ஆராய்ந்து வருகின்றனர்.
டாக்டர்... ராம்குமார்... வீரமணி... கோயம்புத்தூரைச் சேர்ந்த கரிகல்லு செட்டி... 27 லட்சம் ரூபாய்... 17 லாரி... 7லாரி... கிரானைட்... சந்தன லாரி என்று பல வார்த்தைகள் அரைகுறையாகவே எழுதப்பட்டிருந்தன.
வீரப்பன் தன் கூட்டாளிகளுடன் பேசிய விவரங்களைத்தான் நாகப்பா இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிரானைட் குவாரி அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோர் வீரப்பனுக்கு இன்னும் கப்பம் கட்டி வருவதாகவும்தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே கர்நாடக அமைச்சர் ராஜு கவுடாவின் நெருங்கிய நண்பரான பசவராஜ் என்பவர் காட்டுக்குள்சென்று வீரப்பனைச் சந்தித்துப் பேசிய விவரம் தெரிய வந்துள்ளது.
வீரப்பனுடன் ராஜு கவுடாவுக்குத் தொடர்பு உள்ளதால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும்கர்நாடக முதல்வரும் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அம்மாநில சட்டசபையில் பா.ஜ.கவினர்நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பனுடன் பசவராஜ் என்ன பேசினார் என்பது குறித்து விசாரித்து தெரியப்படுத்த வேண்டும் என்றுநாகப்பாவின் குடும்பத்தினர் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications