மனவளர்ச்சி இல்லாத இரட்டைக் குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற தந்தை
புதுக்கோட்டை:
தான் பெற்ற இரட்டைக் குழந்தைகள் மன வளர்ச்சி இல்லாமல் இருந்ததால் வேதனை அடைந்த தந்தை அந்த 2குழந்தைகளையும் விஷம் வைத்துக் கொன்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஓனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி வள்ளி.
இவர்களுக்கு அபிராமி, அருண்குமார் என்ற குழந்தைகளும், ராம் மற்றும் லட்சுமண் ஆகிய ஒரு வயது கொண்டஇரட்டை குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இந்த இரட்டைக் குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிக் காணப்பட்டன.
முடி திருத்துநராக இருந்து வரும் சுப்ரமணியன் மிகுந்த கஷ்டத்திற்கிடையே வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வள்ளி மீண்டும் கர்ப்பம் தரித்தார். ஆனால் குடும்ப வறுமை இன்னொரு குழந்தைக்கு இடம்கொடுக்காததால், கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்த சுப்ரமணியனும் வள்ளியும் புதுக்கோட்டை அரசுமருத்துவமனைக்குச் சென்றனர்.
அங்கு வள்ளியை அனுமதித்து விட்டு இரட்டைக் குழந்தைகளுடன் வீடு திரும்பினார் சுப்ரமணியன்.
இரவில் இரட்டைக் குழந்தைகள் இரண்டும் அழுததால் ஆத்திரம் அடைந்த சுப்ரமணியம், அவை இரண்டுக்கும்பாலில் விஷம் கலந்து கொடுத்தார். இதில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டன.
இதையடுத்து தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்துக் கூறினார் சுப்ரமணியன். பின்னர் அனைவரும் சேர்ந்துயாருக்கும் தெரியாமலேயே குழந்தைகளைப் புதைத்து விட்டனர்.
ஆனால் இதுகுறித்துத் தெரிய வந்த கிராம நிர்வாக அதிகாரி உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.போலீஸார் விரைந்து வந்து சுப்ரமணியனைக் கைது செய்தனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications