மீண்டும் கன்னத்தில் கை வைத்துக் காத்திருக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில். சம்பா நெல்லைக் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகத்தில் மீண்டும் கன்னத்தில்கை வைத்தபடி காவிரியைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கின்றனர் தஞ்சை, திருச்சி, நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகள்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் காவிரியில் கர்நாடகம் நீர் திறந்துவிட்டதாலும், நல்ல மழை பெய்ததாலும் சம்பா பயிரைமகிழ்ச்சியுடன் பயிரிட்டனர் இந்த விவசாயிகள்.

இப்போது பால் பிடித்துவிட்ட இந்தப் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீர் வேண்டி நிற்கின்றனர் விவசாயிகள். கர்நாடகம் நீரைவிடுவதை நிறுத்திவிட்டதாலும் மழையும் நின்றுவிட்டதாலும் பயிரை ஒழுங்காக அறுவடை செய்துவிட முடியுமா என்பதேசந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

காவிரி விவகாரம் உச்சத்தில் இருந்து ஆளுக்கு ஒரு அறிக்கை, போராட்டம், உண்ணாவிரதம் இருந்து ஆர்பாட்டம் செய்தஅரசியல்வாதிகளும், திரையுலகப் பிரமுகங்களும் இப்போது தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டதால் யாரிடம் போய்சொல்லி அழுவது என்று நிற்கின்றனர் இந்த பரிதாப விவசாயிகள்.

ஆனால், எப்போதும் போல இப்போதும் அவர்களை வந்து சந்தித்து வேண்டியதைச் செய்வதாகக் கூறிய ஒரே அரசியல்வாதிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான நல்லகண்ணு தான்.

காவிரிப் படுகை பகுதிகளில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள நல்லகண்ணு கூறுகையில்,

கர்நாடகம் நீர் விட மறுத்ததால் குறுவைப் பயிரை இழந்து பசி, பட்டினிக்கு ஆளான விவசாயிகள் நம்பி இருப்பது இந்த சம்பாநெல்லைத் தான். இதை ஒழுங்காக பாதுகாத்து அறுவடை செய்தால் தான் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு பொங்கலே.இல்லாவிட்டால் மீண்டும் பசி, பட்டினி தான் என்றார் கவலையுடன்.

மேலும் அவர் கூறுகையில், மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலையில் கர்நாடகத்திடம் பேசி எப்படியாவதுநீரைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றார்.

கிட்டத்தட்ட 7 லட்சம் ஹெக்டேரில் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. பால் பிடித்து இந்தப் பயிர்கள் காற்றில் ஆடுவகேகண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. உரிய நேரத்தில் நீர் வராவிட்டால் குறுவைப் பயிர் மாதிரி இதுவும் கருகி விவசாயிகளின்வாழ்க்கையே வெறுமையாக்கிவிடும்.

இதற்கிடையே இந்தப் பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியாக மேட்டூர் அணையில் இருந்து முறை வைத்து 10 நாட்களுக்கு ஒருமுறை நீரைத் திறந்துவிட்டு வருகிறது பொதுப் பணித்துறை. காவிரியின் தென் பகுதி விவசாயிகளுக்கும், வட பகுதிவிவசாயிகளுக்கும் மாற்றி மாற்றி இந்த நீர் வழங்கப்படுகிறது.

ஆனால், மழை பெய்தலோ அல்லது கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்தலோ தான் பயிர்களை முழுமையாகக் காப்பாற்ற முடியும்என்பதால் விவசாயிகள் கண்களில் மிரட்சியுடன் தான் நடமாடி வருகின்றனர்.

நல்லகண்ணு சொல்வதே, காவிரிப் படுகை விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பொங்கலே இப் பயிர்கள் காப்பாற்றப்படுவதைப்பொறுத்துத் தான் உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+