வைகோ விடுதலை கோரி இளங்கோவன் கையெழுத்து
சென்னை:
பொடா சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மூத்த காங்கிரஸ்தலைவர் குமரி அனந்தன் ஆகியோரும் கையெழுத்துப் போட்டுள்ளனர்.
ராஜிவ் காந்தி கொலை விஷயத்தில் விடுதலைப் புலிகளை எதிர்த்து வரும் காங்கிரஸ் இதில் கையெழுத்திட்டிருப்பதை அதிமுகவும்காங்கிரசில் உள்ள சில தலைவர்களும் விமர்சித்துள்ளனர். ஆனாலும் தான் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என இளங்கோவன்கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், பொடா சட்டத்தில் வைகோவைக் கைது செய்தது தவறு என்று நான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன். சோ.பாலகிருஷ்ணனும் இதில் கையெழுத்துப் போட்டுள்ளார். கைதாகி 160 நாட்களுக்கு மேலாகியும் அவர் மீதுஇன்னும் குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி விசாரணையே இல்லாமல் ஒரு தலைவரை சிறையில் அடைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதனால் தான் கையெழுத்துப் போட்டோம். வைகோ ஏன் கைது செய்யப்பட்டார் என்பதெல்லாம் வேறு விஷயம். அந்தப்பிரச்சனைக்கு போக நான் விரும்பவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சியில் சில மனநோயாளிகளும் இருக்கின்றனர் (அதிமுகவை ஆதரிக்கும் தங்கபாலு போன்றவர்களைத்தான் இவர் குறிப்பிடுகிறார்).யார் தோளிலாவது ஏறி பதவிக்குப் போவது தான் அவர்களது ஒரே கொள்கை. மக்கள் எழுச்சிபெரும்போது இந்த பதவி வெறியர்கள் திருஷ்டி பூசணிக்காய் போல வெடித்துச் சிதறுவார்கள் என்றார் இளங்கோவன்.
-->
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications