இந்துத்துவா எங்கள் கொள்கை அல்ல: பா.ஜ.க. பல்டி
ஹைதராபாத்:
இந்துத்துவா என்பது எங்களது அரசியல் கொள்கை அல்ல என்று பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
குஜராத் வெற்றிக்குப் பின்னர் இனி வரும் தேர்தல்களில் இந்துத்துவாவை பா.ஜ.க. முன்னிலைப்படுத்தும் எனவெங்கைய்யா நாயுடு கூறியிருந்தார். இதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக, ஐக்கிய ஜனதா தளம்,தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
தீவிர இந்துத்துவாவை பா.ஜ.க. கையில் எடுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என இக் கட்சிகள்எச்சரித்தன. இதையடுத்து பா.ஜ.க. அரசியல் பல்டி அடித்துள்ளது.
இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய நாயுடு,
குஜராத் தேர்தலில் இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி நாங்கள் ஓட்டுக் கேட்கவில்லை. இது தேசிய ஜனநாயகக்கூட்டணியின் கொள்கையும் கிடையாது. இந்துத்துவாவை வைத்து ஓட்டு கேட்க மாட்டோம். குஜராத்தில் கட்சியின்அனைத்துப் பிரிவுகளும் ஒன்று சேர்ந்து உழைத்ததால் தான் வெற்றி கிடைத்தது.
இதே போன்ற ஒற்றுமையைக் காட்டித் தான் அடுத்து வரும் ஒன்பது மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் ஓட்டுக்கேட்போம் என்று கூறினேன். அதைத் தான் இந்துத்துவாவை வைத்து ஓட்டு கேட்போம் என்று நான் கூறியதாகதிரித்துவிட்டார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்துமுயற்சிக்கின்றன. ஆனால் அவர்களுடைய முயற்சிகள் எதுவும் பலிக்காது.
எங்கள் கொள்கையை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் மீது திணிக்க மாட்டோம்.
இந்துத்துவா என்பது மாபெரும் கொள்கை. அது அரசியல் கொள்கையல்ல என்றார் வெங்கையா நாயுடு.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications