நாகர்கோவில் நகை கடைகளில் ரெய்ட்: ரூ.1.5 கோடி தங்கம் பறிமுதல்
நாகர்கோவில்:
தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாகர்கோவில் நகைக் கடைகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது ஒரே நாளில் ரூ.1.5 கோடி மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், மக்கள் தங்க நகைகளைவாங்கிக் குவித்துக் கொண்டுதான் உள்ளனர்.
ரம்ஜான், கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. நகைகள் விற்பனையும் அமோகமாகநடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மண்டல வருமான வரித் துறை அதிகாரிகள் நாகர்கோவில் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் நேற்று திடீரென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது சில கடைகளில் ஏராளமான தங்கக் கட்டிகளும், நகைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைஅதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவை அனைத்தும் முறையான ஆவணங்கள் இல்லாமலும், வருமான வரி செலுத்தாமலும் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நகைகளைஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1.5 கோடி என்று தெரிய வந்துள்ளது.
ஒரே நாளில் இந்த அளவுக்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவற்றைத் தவிர மேலும் சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி, அவை குறித்துத் தொடர்ந்துவிசாரித்து வருகின்றனர்.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications