கொடைக்கானல் மலையில் 2 மாணவர்கள் தற்கொலை
சென்னை:
சென்னையைச் சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் கொடைக்கானல் மலையில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
சென்னை-விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்த சேதுராமன் என்பவரின் மகன் ரமேஷ்பாபு. இவர்மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஈ.எஸ். படித்து வந்தார்.
அதே கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்த சசிகுமாரும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.சசிகுமாரும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர்தான்.
ரமேஷ்பாபுவும், சசிகுமாரும் கடந்த 6ம் தேதி வெளியூருக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுவெளியேறினர். ஆனால் இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் வெவ்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர்.
தன் நண்பர் ஒருவருடைய அக்காவின் திருமண நிச்சயதார்த்தத்திற்குச் செல்வதாக சசிகுமார் தன் பெற்றோரிடம்கூறியுள்ளார். ரமேஷ்பாபுவோ கல்லூரியில் ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுவெளியேறியுள்ளார்.
ஆனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் வீடு திரும்பாததால்சந்தேகமடைந்த இருவரின் பெற்றோரும் கடந்த 12ம் தேதி போலீசாரிடம் புகார் செய்தனர். இதையடுத்துமாணவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
சேலத்தில் அவர்களைப் பார்த்ததாக ஒரு மாணவரின் உறவினர் தெரிவித்தார். இதையடுத்து சேலம்சுற்றுவட்டாரத்தில் வலை வீசித் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கொடைக்கானல் தற்கொலைப் பாறை அருகே சசிகுமாரும், ரமேஷ்பாபுவும் பிணமாகக் கிடப்பதாகச்சென்னை போலீசாருக்கு கொடைக்கானல் போலீசார் தகவல் கொடுத்தனர்.
கல்லூரி அடையாள அட்டைகள் மூலம்தான் அம்மாணவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.இதையடுத்து அவர்களுடைய பெற்றோர்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் விரைந்தனர் சென்னைபோலீசார்.
இறந்து கிடந்த இரண்டு பேரும் சசிகுமாரும், ரமேஷ்பாபுவும்தான் என்று அவர்களுடைய பெற்றோர்கள்அடையாளம் கூறினர்.
ஆனால் மாணவர்கள் இருவரும் தற்கொலை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்று அவர்களுடையபெற்றோர்கள் அடித்துக் கூறுகின்றனர். வீட்டை விட்டு வெளியேறும் வரை சசிகுமாரும், ரமேஷ்பாபுவும்சந்தோஷமாகத்தான் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் அந்த மாணவர்கள் இருவரும் ஒரு கடிதத்தைக்கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். "தங்களைத் தேட வேண்டாம்" என்று அக்கடிதத்தில் அம்மாணவர்கள்எழுதியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளதாகப் போலீசார் கூறுகின்றனர்.இருப்பினும் இந்த மர்மச் சாவுகள் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டு மாணவர்களின் வீடுகளிலும், அவர்கள் படித்த கல்லூரியிலும் கனத்த சோகம் நிலவுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications