தாமரைக்கனியை தாக்கிய வழக்கு: நாகை நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
வேலூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் கடந்த 1984ல் தாக்கப்பட்ட வழக்குதொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 1984 மே 19ம் தேதி மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் தாமரைக்கனி உள்ளிட்ட சிலஅதிமுகவினர் வேனில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வைகோ, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி உள்பட சில திமுகவினர் சேர்ந்து கொண்டுதாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினரைத் தாக்கியதாகப் புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக வைகோ, கோ.சி. மணி, இடும்பையன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இரண்டு பேர் இறந்து விட்டனர்.வைகோ, கோ.சி. மணி மற்றும் இடும்பையன் ஆகியோர் மீது மட்டும் தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக வைகோ ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
இவ்வழக்கில் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு போதுமான காரணங்கள் இல்லை.
மேலும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் சட்டம் காலாவதியாகி விட்டதால் வழக்கை மேற்கொண்டுநடத்த வேண்டிய அவசியமில்லை என்று அம்மனுவில் வைகோ கூறியிருந்தார்.
இம்மனுவை சமீபத்தில் விசாரித்த நாகப்பட்டினம் நீதிமன்றம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கக் காலஅவகாசம் தரும் வகையில் இன்றைக்கு ஒத்திவைத்தது.
அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜராவதற்காக வேலூர் சிறையில்அடைக்கப்பட்டிருந்த வைகோ பலத்த பாதுகாப்புடன் நாகப்பட்டினம் அழைத்துச் செல்லப்பட்டார்.
நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பின்னர் இவ்வழக்கைவரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications