நாளை பிறக்கிறது 2003: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
நாளை 2003ம் ஆண்டு பிறப்பதையொட்டி ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தமிழக ஆளுநர்ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
இன்றுடன் 2002ம் ஆண்டு முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
டாக்டர் கலாம்:
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி. தன்னுடையவாழ்த்துச் செய்தியில்,
நாம் அனைவருமே கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.
பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக நாம் கட்டாயம் உழைத்தே ஆகவேண்டும்.
நாட்டிலுள்ள 100 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரின் மனத்திலும், அமைதியும் உறுதியும் திகழவாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் டாக்டர் கலாம்.
ராமமோகன் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
ஜெயலலிதா:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
நாளை மலரவுள்ள புத்தாண்டின்போது நாடு செழிக்கட்டும். நலன்கள் கொழிக்கட்டும்.
புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவரும் புது மலர்ச்சியுடன், புது வளர்ச்சி பெற்று புது எழுச்சியுடன் வாழவாழ்த்துகிறேன்.
கடந்த 2002ல் தமிழகம் சாதித்த சாதனைகள் ஏராளம். ஆனால் அந்த சாதனைகள் போதாது. இன்னும் சாதிக்கவேண்டியவை ஏராளமாக உள்ளன.
வறட்சி, நிதி நெருக்கடி என பல இடர்பாடுகளுக்கிடையிலும் தமிழகம் முன்னேறிக் கொண்டிருப்பதற்கு தமிழகமக்களின் உள்ள உறுதியும், ஈடுபாடுமே காரணம்.
வருகிற 2003ம் ஆண்டிலும் இந்த சாதனை தொடர உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கருணாநிதி:
கருணாநிதி தன்னுடைய வாழ்த்து அறிக்கையில், இந்தப் புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் எல்லா நலமும்பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
வாசன், சோபா, இளங்கோவன்:
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் கட்சியின் அகில இந்தியபொதுச் செயலாளர் ஜி.கே. வாசன் ஆகியோர் கூட்டாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதத்தை ஒழித்து மத நல்லிணக்கமும், அமைதியும் தழைத்தோங்குவதற்காகப் பாடுபட இந்தப் புத்தாண்டில்உறுதி மொழி எடுப்போம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
டாக்டர் ராமதாஸ்:
வறுமையை விரட்டி, வளமான தமிழகத்தை உருவாக்க இந்தப் புத்தாண்டில் உறுதி கூறுவோம் என்று பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நல்லக்கண்ணு உள்ளிட்டவர்களும்மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications