கலாமின் பாடலுக்கு இசையமைக்கும் தமிழக மாணவி
சென்னை:
ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ஒரு பாடலுக்கு சென்னையைச் சேர்ந்த பிளஸ் டூமாணவியமான ஹரிணி என்பவர் இசை அமைக்கிறார்.
கடந்த மாதம் சென்னை வந்திருந்த டாக்டர் கலாம், மியூசிக் அகாடமியில் நடந்த இசை விழாவில் கலந்துகொண்டார். அப்போது, தானே இயற்றிய கர்நாடக இசையில் அமைந்த பாடல் ஒன்றையும் ராகத்தோடு பாடிஅனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அந்த விழாவின்போதுதான் ஹரிணியை கலாமுக்கு அறிமுகப்படுத்தினர். இசைக் கல்வி பயின்ற ஹரியிணியிடம்தனது இன்னொரு பாடலுக்கு இசை அமைத்துத் தருமாறு கலாம் கேட்டுக் கொண்டார். தேசப் பற்று குறித்த அந்தப்பாடலை அப்போதே ஹரிணியின் கையில் கொடுத்துவிட்டார் கலாம்.
இப்போது அந்தப் பாடலுக்கு இசையமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவயலின் கலைஞரான ஹரிணி. ஹரிணியின் தாய் பேராசிரியர் டாக்டர் பாகீரதியும், அவருடைய சகோதரர் பாரூர்சுந்தரேஸ்வரனும் இந்த இசையமைக்கும் பணியில் உதவி வருகின்றனர்.
சென்னை குயீன்ஸ் மேரி கல்லூரியின் இசைத் துறைத் தலைவராக உள்ளார் பேராசிரியர் பாகீரதி.
-->












Click it and Unblock the Notifications