அரசுப் பகுதிகளில் திரையிடப்பட்ட புலிகளின் சினிமா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கம் தயாரித்துள்ள கடலோரக் காற்று என்ற திரைப்படம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்திரையிடப்பட்டுள்ளது.

இனப் போரினால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களின் கதை தான் இந்தப் படம். புலிகள் தயாரித்துள்ள படம் வட-கிழக்குப்பகுதி தவிர்த்த பிற பகுதிகளில் வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

இதுவரை புலிகள் இயக்கம் 50 திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளது. இவை எல்லாமே புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதிகிளில் மட்டுமே திரையிடப்பட்டு வந்தன. இப்போது தான் அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் புலிகளின்படத்தைத் திரையிட அனுமதித்துள்ளது.

அமைதி முயற்சிகளுக்கு மேலும் ஊக்கம் தரும் வகையிலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து வவுனியாவில் புலிகளின் செய்தித் தொடர்பாளர் இளம்தென்றல் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்தப் படம் 2 மணி நேரம் ஓடும். ஜேசுதாசன் என்ற மீனவரின் உறவினர்கள் மீன் பிடிக்கக் கடலில் செல்லும்போதுகொல்லப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த மீனவர்களின் குடும்பங்கள் படும்பாடு தான் கதையின் கரு என்றார்.

வட கிழக்குப் பகுதிகள் முழுவதும் பல திரையரங்குகளிலும் இப் படம் திரையிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் வீடியோகேசட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் படம் தவிர்த்து அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போடவும் புலிகளுக்கு அனுமதிதரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+