வீரப்பனை வேட்டையாட வருகிறது "கறுப்புப் பூனை" படை
டெல்லி:
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடுவதற்காக "கறுப்புப் பூனை" என அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப்படை கமாண்டோக்கள் அனுப்பப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும் அடுத்த 15 நாட்களுக்குள் தமிழக, கர்நாடக அதிரடிப் படையினருக்குத் தேவையான அனைத்து நவீனஆயுதங்களும் வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
இதற்கிடையே குண்டுக் காயம் அடைந்துள்ள சேத்துக்குளி கோவிந்தனுக்கு சிகிச்சை அளிக்க டாக்டரைக் கடத்தும் முயற்சியில்வீரப்பன் கும்பல் ஈடுபட்டிருப்பதாகவும் உளவுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடந்த மாதம் 8ம் தேதி காட்டில் பிணமாகக்கண்டெடுக்கப்பட்டார். நாகப்பா எவ்வாறு இறந்தார் என்பது குறித்த மர்மம் இன்னும் நீடிக்கும் நிலையில், அதிரடிப்படையினர் வீரப்பன் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாகப் புதிய வியூகங்களை வகுக்க இன்று டெல்லியில் முக்கியஆலோசனை நடந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளரான அசோக் பண்டாரி தலைமையில்இக்கூட்டம் நடந்தது.
இதில் தமிழக அதிரடிப் படைத் தலைவர் நடராஜன், ஐ.ஜி. பாலச்சந்திரன், கர்நாடக அதிரடிப்படைத் தலைவர்ஜோதி பிரகாஷ் மிர்ஜி உள்ளிட்ட அதிகாரிகள் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் ராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணிநேரம் நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் நடராஜன் பேசுகையில்,
வீரப்பனை வேட்டையாடுவதற்கான புதிய வியூகங்கள் அமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் நாங்கள்விவாதித்தோம். வீரப்பன் வேட்டையின்போது எங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் கூறினோம்.
அவனைப் பிடிப்பதற்குத் தேவையான ஆயுதங்களையும், மத்தியப் படையினரையும் மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.
அடுத்த 15 நாட்களுக்குள் எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவோம் என்று அசோக்பண்டாரி உறுதி அளித்துள்ளார்.
கூடிய விரைவில் வீரப்பனைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கத் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்நடராஜன். ஆனால் மேற்கொண்டு எந்த விவரங்களையும் தெரிவிக்க நடராஜன் மறுத்து விட்டார்.
ஆனாலும் வீரப்பனைப் பிடிக்க கறுப்புப் பூனைப் படைகளை அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகஉள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டரில் பறந்து சென்று அடர்த்தியான காடுகளில் இறங்கி தேடுதல் வேட்டை நடத்துவதில் இந்தக் கறுப்புப்பூனைப் படையினர்கள் வல்லவர்கள். விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் இவர்களுக்கு வழங்கப்படும்என்று தெரிகிறது.
வீரப்பனைப் பிடித்துத் தர உதவுபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு சமீபத்தில்அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டரைக் கடத்த முயற்சி?
நாகப்பா மரணத்தின்போது வீரப்பன் அனுப்பிய கேசட்டில் தமிழக அதிரடிப்படை சுட்டு எங்கள் தரப்பிலும் சிலருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தான். அவன் சொல்வது உண்மை என்றும் சேத்துக்குளியானுக்கு குண்டுக் காயம்ஏற்பட்டுள்ளதாகவும் சில வனப் பகுதி கிராமவாசிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அவனுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் யாரையாவது கடத்த வீரப்பன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காட்டுப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications