சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.10 உயர்வு
சென்னை:
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. சென்னையில் இவற்றின் விலைகள் லிட்டருக்கு ரூ.1.10அதிகரித்துள்ளன.
ஈராக் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலையில் சர்வதேச மார்க்கெட்டில் கச்சாஎண்ணெயின் விலை கிடுகிடுவென்று உயர்ந்தது.
மேலும் வெனிசூலாவில் உள்ள எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதாலும், தற்போதுகுளிர்காலம் என்பதால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதாலும்கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளைஉயர்த்தியுள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.
அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.32.55ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இதுரூ.31.45ஆகத்தான் இருந்தது.
அதே போல் டீசலின் விலையும் லிட்டருக்கு ரூ.1.10 அதிகரித்துள்ளது. அதாவது ரூ.19.83ஆக இருந்த ஒரு லிட்டர்டீசலின் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூ.20.93ஆக உயர்ந்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications