எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் நான் பயப்பட மாட்டேன்: ஜெ.
சென்னை:
அதிமுகவுக்கு எதிராக யார், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் நான் பயப்படப் போவதில்லை. யாருக்கும் நான்பயப்படவும் மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலை வைத்து எதிர்க் கட்சிகள் ஒரே அணியில் திரண்டு வரும் நிலையில் நேற்று இரவுதனது ஒரு வார ஓய்வை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ஜெயலலிதா.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பாரதீய ஜனதா கட்சியுடன், அதிமுக ரகசிய உறவு வைத்துள்ளதாக கூறப்படுவது வெறும் கற்பனையான செய்தி.சிலருடைய கற்பனையின் சிறு வெளிப்பாடுதான் இது.
குஜராத்தில் மோடி பதவியேற்பு விழாவுக்குச் சென்றது பெரிய விஷயமல்ல. நல்லெண்ண அடிப்படையில் மோடிஅழைத்தார். நான் கலந்து கொண்டேன். இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்றுகருதுகிறேன்.
இந்துத்வா குறித்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கருத்துக் கொண்டுள்ளனர், அதை வெளிப்படுத்திவருகின்றனர். அதுபோலவே, பிரதமர் வாஜ்பாயும் தனது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.
தேசிய அளவில் நாங்கள் ஏற்கனவே முக்கியப் பங்கு வகித்து வருகிறோம். எனவே தனியாக தேசிய அரசியலில்இனிதான் நுழைய வேண்டும் என்பதில்லை.
அதிமுகவுக்கு எதிராக, யார், எத்தகைய கூட்டணி அமைத்தாலும் நான் பயப்படப் போவதில்லை. யாருக்கும் நான்பயப்படவும் மாட்டேன்.
13ம் தேதி டெல்லியில் நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்வேன். இதுதொடர்பாகபிரதமருக்கு 2 முறை கடிதம் எழுதியிருந்தேன் என்றார் ஜெயலலிதா.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவியுடன் பா.ஜ.க. கூட்டணியில் நுழைய ஜெயலலிதா முயல்வதாகவும்இதற்காக அவரைச் சந்தித்துப் பேசவே ஹைதராபாத் சென்றார் என்றும் செய்திகள் வரும் நிலையில் அதைஜெயலலிதா மறுத்துள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications