விவசாயி தற்கொலை: தமிழக அரசுக்கு இ. கம்யூ. கண்டனம்
சேலம்:
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி வீரையன் ஏராளமான கடன் வாங்கி சம்பா பயிரிட்டும் அதைஅறுவடை செய்ய நீர் இல்லாமல்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்மாநிலப் பொதுச் செயலாளரான நல்லக்கண்ணு கூறினார்.
இது தொடர்பாக இன்று அவர் சேலத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
குடும்பத் தகராறு காரணமாகத்தான் வீரையன் தற்கொலை செய்து கொண்டதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்கூறியுள்ளார்.
பிரச்சனையை மூடி மறைக்கவே கலெக்டர் இவ்வாறு கூறியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.
ஏராளமான பணம் கடன் வாங்கி வீரையன் சம்பா சாகுபடிக்காகப் பயிரிட்டுள்ளார். ஆனால் இந்த அரசோகர்நாடகத்திடமிருந்து காவிரியில் நீரைப் பெற்றுத் தருவதில் அலட்சியம் காட்டி வருகிறது.
தற்போது வீரையன் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்பத் தகராறுதான் காரணம் என்று கூறி இந்தப்பிரச்சனையை மூடி மறைக்க முயற்சிக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட வீரையனின் குடும்பத்தினருக்கு உடனடியாக உரிய இழப்பீட்டை தமிழக அரசுஅளிக்க வேண்டும் என்றார் நல்லக்கண்ணு.
-->












Click it and Unblock the Notifications