பரபரப்பான விற்பனையில் கடைசி லாட்டரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டும் லாட்டரிகளை விற்றுக் கொள்ள நீதிமன்றம் அனுமதி அளிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகம்முழுவதும் லாட்டரிச் சீட்டு விற்பனை மீண்டும் பரபரப்பாக நடந்து வருகிறது.

அனைத்து வகையான லாட்டரிகளையும் தமிழக அரசு கடந்த 8ம் தேதி திடீரென தடை செய்தது.

இதனால் பல லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு விடிவு ஏற்படும் என்றாலும் இந்த லாட்டரிகளை விற்று பிழைத்து வந்தஆயிரக்கணக்கான குடும்பங்கள் திக் பிரமையில் உள்ளன. குறிப்பாக உடல் ஊனமுற்றவர்கள், பார்வையற்றவர்கள் இந்தலாட்டரிகளை விற்றுத் தான் குடும்பங்களை நடத்தி வந்தனர்.

லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது உயர் நீதிமன்றம் அதேநேரத்தில் ஏற்கனவே சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுவிட்டதால் வரும் 21ம் தேதி வரை அவற்றை விற்றுக் கொள்ள நீதிமன்றம்நேற்று அனுமதி அளித்தது.

இதையடுத்து கடந்த 9ம் தேதி மூடப்பட்டிருந்த லாட்டரிக் கடைகள் இன்று திறந்தன. அங்கு விற்பனைஅமோகமாக இருந்தது. கடைசி கடைசியாய் வாங்குகிறோம் என்று நூற்றுக்கணக்காவர்கள் இன்று லாட்டரிகடைகள் முன் குவிந்தனர்.

ஏற்கனவே விற்கப்பட்டுவிட்ட லாட்டரிகளின் குலுக்களை மட்டும் நடத்திக் கொள்ளலாம் எனவும் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+