பவானியில் அணை: பிரதமருக்கு தமிழக விவசாயிகள் அவசர கடிதம்
சென்னை:
பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரிபிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக விவசாய சங்கங்களின் பேரவை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உற்பத்தியாகி கேரளாவுக்குள் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே அம்மாநிலம் அணை கட்டுவதற்கானமுயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதைத் தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள எதிர்க் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் அணை கட்டும் முயற்சியை கேரள அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இவ்விஷயத்தில்பிரதமர் தலையிட வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வாஜ்பாய்க்கு விவசாய சங்கங்களின் பேரவைத் தலைவர் ராமலிங்கம் எழுதியுள்ள கடிதத்தில்,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி என்னும் இடத்தில்தான் பவானி ஆறு உற்பத்தியாகிறது. இவ்வாறுஉற்பத்தியாகும் ஆறு கேரளாவில் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே பாய்கிறது. பின்னர் மீண்டும்தமிழகத்திற்குள்ளேயே வந்து பாய்கிறது.
தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பவானி ஆற்றின் குறுக்கேகேரள அரசு அணை கட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதுவரை 150 மீட்டர் தூரத்திற்குக் கால்வாயைவெட்டியுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டினால் தமிழகத்தில் உள்ள 2.16 லட்சம் ஏக்கர் நிலங்கள்நீரில்லாமல் பாதிக்கப்படும்.
மேலும் கேரள எல்லையில் உள்ள தமிழக நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடுமையான குடிநீர்ப் பஞ்சமும்ஏற்படும்.
எனவே கேரள அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த உத்தரவிடும் வகையில் இவ்விஷயத்தில்பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார் ராமலிங்கம்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications