சென்னையில் "கடத்தப்பட்ட" பஸ் தாறுமாறாக ஓடியதில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அரசு பஸ்சைக் கடத்திய ஒருவர் அதைத் தாறுமாறாக ஓட்டியதில் ஒரு பெண் உள்பட 3 பேர்பரிதாபமாக பலியாயினர்.

சென்னை சைதாப்பேட்டைக்கும், கீழ்கட்டளைக்கும் இடையே ஓடும் 18-டி பஸ், நேற்று இரவு 10 மணிக்கு பணிமுடிந்து, சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை டிப்போவுக்குக் கொண்டுவரப்பட்டது.

டிப்போவில் இடம் இல்லாததால், அதன் வெளிப்பக்கத்திலேயே பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்த பஸ்சைக் கடத்திக் கொண்டு சென்றான். ஆளுநர்மாளிகையான "ராஜ் பவன்" அருகே உள்ள சர்தார் வல்லபாய் படேல் சாலையில் அவன் பஸ்சைத் தாறுமாறாகஓட்டிச் சென்றான்.

சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ, டிரை சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது மோதியபஸ் தாறுமாறாக அவற்றின் மீது ஏறி இறங்கியது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்த 25 வயது வாலிபர், டிரை சைக்கிளை ஓட்டிச் சென்ற ஊனமுற்றநபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஒரு பெண் இறந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தால் சர்தார் வல்லபாய் படேல் சாலையில் பெரும் பரபரப்புஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இரவில் பஸ்சை யாரோ சிலர் கடத்திச் செல்ல முயன்றபோதுதான் விபத்து நடந்ததாக சின்னமலை பஸ் டிப்போஊழியர்கள் கூறினார்கள்.

ஆனால் இதை போலீஸார் நம்ப மறுக்கிறார்கள். விபத்து நடந்த நேரத்திற்கும், ஊழியர்கள் பஸ்சை யாரோ கடத்திச்சென்றதாக கூறும் நேரத்திற்கும் பொருத்தமே இல்லை என்பது போலீஸாரின் வாதம்.

அதேசமயம், பஸ்சை யாரும் கடத்திச் சென்றதாகத் தெரியவில்லை என்று டிப்போவுக்கு அருகே உள்ள ஆட்டோடிரைவர்களும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+