ஏற்காடு நிர்வாண பூஜைக்குத் தடை
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள மலைக் கிராமமான வெள்ளக்கடையில் ஆண்டுதோறும் நடக்கும்அம்மணக் கூத்து எனப்படும் நிர்வாண பூஜை போலீஸ் கெடுபிடி காரணமாக இந்த ஆண்டு நடைபெறவில்லை.
வெள்ளக்கடை கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்குப் பிறகு காளியம்மனுக்கு நிர்வாண பூஜை நடப்பதுண்டு.அப்படி நடத்தினால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது.
இந்தப் பூஜை நடக்கும்போது ஆண்கள் அனைவரும் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றுகூறப்பட்டாலும் உண்மை நிலை வேறு.
பெண்களின் நிர்வாணக் கோலத்தைக் காண சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிமாணவர்களும், சேலம் நகரின் முக்கிய தாதாக்கள் கும்பலும் தவறாமல் வந்துவிடுவார்கள். கிராமத்துக்குள்நுழையாவிட்டாலும் அருகில் உள்ள மலை முகடுகளிலும், மறைவுகளிலும் பைனாக்குலர்களுடன் ஏறி உட்கார்ந்துகொண்டு இந்தப் பூஜையை இவர்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது உண்டு.
இதையடுத்து இந்தப் பூஜைக்கு பெண்கள் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்துநிர்வாண பூஜைக்கு அரசு தடை விதித்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாண பூஜை நடைபெறவில்லை.
ஆனால், நிர்வாண பூஜை நடக்காத காரணத்தால் தங்களது கிராமத்தில் மழையே பெய்யாமல் வறட்சி ஏற்பட்டதாககிராமத்தினர் கருதினர்.
இதையடுத்து இந்த ஆண்டு எப்படியும் நிர்வாண பூஜையை நடத்தியே தீருவது என்று வெள்ளக்கடை கிராமம்முடிவு செய்தது. ஆனால், வழக்கம் போல போலீஸார் அதற்குத் தடை விதித்திருந்தனர். இதையும் மீறி பூஜைநடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை நிர்வாண பூஜை நடத்த பெண்கள் குழுமினர். ஊருக்கு வெளியே ஒரு கம்பம் நட்டு,அதற்கு மேல் ஆண்கள் யாரும் வரத் தடை விதிக்கப்பட்டது.
மீறி வந்தால், காளியம்மன் தண்டிப்பார் என்றும் எச்சரிக்கப்பட்டனர். இதையடுத்து கிராமத்து ஆண்கள்அனைவரும் கம்பத்துக்கு வெளியேதான் இருந்தனர்.
ஆனால், தடையை மீறி பூஜை நடக்கப் போவதை உணர்ந்த பெண் போலீசார் கிராமத்துக்குள் நுழைந்தனர்.நிர்வாண பூஜை நடத்தினால் கைது செய்வோம் என எச்சரித்தனர். நிர்வாண கோலம் பூணாமல் வெறும் சிறப்புப்பூஜையை மட்டும் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து நிர்வாண பூஜையை பெண்கள் கைவிட்டனர்.
காளியம்மன், மாரியம்மனுக்கு படையல் இட்டு பெண்கள் பூஜை மட்டுமே நடத்தியதாகவும் ஒவ்வொருவீட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சோள மாவு ரொட்டிகள், வாழைப் பழங்கள் ஆகியவற்றேக் கொண்டு பூஜைநடந்ததாகவும் பகல் 11.30 மணிக்கு இந்தப் பூஜை நடந்ததாகவும் பெண் போலீஸார் பின்னர் நிருபர்களிடம்தெரிவித்தனர்.
பூஜை நடக்கும் கிராமத்திற்குள் ஆண் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்று பெண்கள்கண்டிப்பாக கூறி விட்டதால் பெண் போலீஸார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால், நிர்வாணப் பூஜையை இந்த வாரத்திற்குள் இன்னொரு நாளில் ரகசியமாக நடத்தி விட அந்தக் கிராமம்முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications