ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ராமமோகன் ராவின் உரையுடன் இன்றுதொடங்குகிறது.

ஆளுநர் உரைக்குப் பின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். நாளை சாத்தான்குளம் எம்.எல்.ஏ. மணி நாடார்உள்ளிட்ட 10 முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

அதன் பிறகு கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட வேண்டிய அலுவல்கள் குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடிவிவாதித்து முடிவெடுக்கும் என்றும் சட்டசபைக் கூட்டம் ஒரு வாரத்திற்கு நடைபெறும் என்று சபாநாயகர்காளிமுத்து நிருபர்களிடம் கூறினார்.

பல்வேறு பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையில் சட்டசபைக் கூட்டம் நடைபெறவுள்ளதால், இக்கூட்டத் தொடர்மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி டெல்டாப் பகுதியில் நிலவும் வறட்சி, அதனால் ஏற்பட்டுள்ள விவசாயிகளின் சாவுகள், கர்நாடகத்திலிருந்துகாவிரி நீரைப் பெற்றுத் தராமல் இருக்கும் அரசின் போக்கு, பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டமுயற்சிப்பது, விவசாயிகளுக்கு மதிய உணவுத் திட்டம், பஸ்கள் தனியார் மயம், மின்சார கட்டண உயர்வுஉள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.கவைத் தவிர எதிர்க் கட்சிகள் அனைத்து ஓரணியில் திரண்டு கொண்டிருப்பதால் கடும் அமளி, வெளிநடப்பு,வெளியேற்றம் ஆகியவற்றுக்கும் பஞ்சமிருக்காது என்று தெரிகிறது.

அதேசமயத்தில், சாத்தான்குளத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலை மனதில் வைத்து ஆளுங்கட்சி செயல்படும்என்றும் கூறப்படுகிறது. மக்களைப் பாதிக்கும் வகிையலான புதிய திட்டங்கள் எதுவும் இந்த சட்டசபை தொடரில்அறிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுங்கட்சிக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகரித்துள்ளது.

இத்தனை நாளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த குமாரதாஸ் தலைமையிலான 4 எம்.எல்.ஏக்கள்(மறைந்த எம்.எல்.ஏ. மணிநாடார் தவிர) இப்போது தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியாகசெயல்பட உள்ளனர்.

அதிமுகவின் முழு ஆதரவுடன் உருவான கட்சி என்பதால் இக்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்களும்ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே சட்டசபையில் செயல்படுவார்கள்.

அதேபோல, பா.ஜ.கவும் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+