இன்று காந்தி நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி இன்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதாஉள்ளிட்ட தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 55வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். அவரைத்தொடர்ந்து சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் ஆகியோரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழியை முதல்வர் வாசித்தார். அதை அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும்தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழிர்கள் திரும்ப வாசித்தனர்.

தமிழக எம்.எல்.ஏக்களும் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக சட்டசபை காலை 10.45 மணியிலிருந்துஅரை மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை-மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு ராமமோகன் ராவ் மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார். சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர் பொன்னையன் உள்ளிட்டவர்களும் காந்தி சிலைக்குமாலை அணிவித்தனர்.

பின்னர் ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழியை ஆளுநர் வாசிக்க ராஜ்பவன்அதிகாரிகளும், ஊழியர்களும் அதைத் திரும்ப வாசித்தனர்.

பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டவர்களும் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

டெல்லியில்...

இதற்கிடையே ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்குச் சென்று மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர்.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள சமாதிக்கு டாக்டர் கலாமும் வாஜ்பாயும் சேர்ந்தே சென்று அஞ்சலி செலுத்தினர்.இவர்கள இருவரும் இணைந்து காந்தி சமாதிக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

துணைப் பிரதமர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் ஆகியோரும்காந்தி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காந்தி அமைதி விருது:

இதற்கிடையே பாரதீய வித்யா பவன் என்ற அமைப்பிற்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினத்தன்று காந்தி அமைதி விருது அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுபாரதீய வித்யா பவனுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+