3 சாலை விபத்துக்களில் 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் ஏற்பட்ட 3 வெவ்வேறு சாலை விபத்துக்களில் 3 டிரைவர்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டி அருகே ராஜஸ்தானிலிருந்து மார்பிள் ஏற்றிக் கொண்டுவந்த லாரி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் லாரியின் டிரைவர் உடல் நசுங்கிஉயிரிழந்தார்.

இதே மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு சம்பவத்தில், லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு அதன் டிரைவர்அதிலிருந்து இறங்கினார்.

அப்போது சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் மற்றொரு வாகனத்தை முந்துவதற்கு முயற்சித்தபோது லாரி டிரைவரின் மீது பயங்கரமாக மோதியது.

இவ்விபத்தில் லாரி டிரைவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே, சென்னையில் திருமண விழாவில் கலந்து கொண்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர், ஒருவேன் மூலம் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

காவேரிப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ராணிப்பேட்டையிலிருந்து வந்த லாரி இந்தவேனுடன் பயங்கரமாக மோதியது.

இதில் வேன் டிரைவர் உள்பட அதில் இருந்த மூன்று பேர் உடல் நசுங்கி இறந்தனர். காயமடைந்தவர்களில் சிலர்உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+