பிரதமர் தலைமையில் 10ம் தேதி காவிரி ஆணையம் கூடுகிறது
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையம் வரும் 10ம் தேதி கூடுகிறது என்று மத்திய நீர்வளத் துறைஅமைச்சர் அர்ஜுன் சரண் சேத்தி கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு மதிக்கத் தவறியது.
இதையடுத்து கர்நாடகா மீது தமிழக அரசு இரண்டு அவமதிப்பு வழக்குகளைத் தொடர்ந்தது. இதையடுத்து கடந்தநவம்பரில் ஓரளவு நீரைத் திறந்து விட்ட கர்நாடக அரசு, பின்னர் மீண்டும் பிடிவாதமாக நீர் திறந்து விடுவதைநிறுத்திக் கொண்டது.
இதையடுத்து நவம்பர் 29ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தமிழக முதல்வர்ஜெயலலிதா கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 13ம் தேதி மீண்டும் காவிரி ஆணையம் கூடுவதாக இருந்தது. இம்முறை கேரள,பாண்டிச்சேரி முதல்வர்கள் கலந்து கொள்ளாததையடுத்து, போதிய கோரம் இல்லாததால் ஆணையக் கூட்டம்மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து வாஜ்பாயை ஜெயலலிதா தனியாகச் சந்தித்துப் பேசி காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர்திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பின்னர் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவையும் தனியாகச்சந்தித்துப் பேசிய வாஜ்பாய், தமிழகத்திற்கு உடனடியாக நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கூறினார்.
அதை ஏற்றுக் கொண்ட கர்நாடக அரசு, முதலில் வினாடிக்கு 1,200 கன அடி நீரைத் திறந்து விட்டது. இது போதாதுஎன்று ஜெயலலிதா கூறவே, பின்னர் 2,500 கன அடி நீரைத் திறந்து விட்டதாகக் கர்நாடக அரசு கூறியது.
இவ்வாறு நீரின் அளவை மாற்றி மாற்றித் திறந்து விட்டு தமிழகத்தைக் குழப்பிய கர்நாடக அரசு கடந்த மாதஇறுதியில் நீர் திறந்து விடுவதைத் திடீரென்று நிறுத்தி விட்டது. இனிமேல் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூடக்கிடையாது என்றும் திமிருடன் கூறிவிட்டது.
இந்நிலையில் காவிரி ஆணையத்தை விரைவில் கூட்டுமாறு கடந்த ஜனவரி 31ம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும்உத்தரவிட்டது.
காவிரி ஆணையம் கூடும் தேதி குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம்,அவ்வாறு கூட்டாவிட்டால் தாங்களே இதுகுறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டி வரும் என்றும் கூறியது.
இதற்கிடையே இன்று காலை டெல்லியில் வாஜ்பாயை கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 45நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினர். அப்போது, விரைவில் காவிரி ஆணையத்தைக் கூட்டுமாறு வாஜ்பாயைகிருஷ்ணா வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது அர்ஜுன் சரண் சேத்தியும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் குமார் ஆகியோரும்இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், வரும் 10ம் தேதி (அடுத்த திங்கள்கிழமை) காவிரிஆணையக் கூட்டம் நடைபெறலாம் என்றார்.
பின்னர் ஆனந்த் குமார் (இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்) நிருபர்களிடம் பேசுகையில், கர்நாடகம் மிகவும்மோசமான வறட்சி நிலையைச் சந்தித்து வருகிறது. பாசனத்திற்கோ, குடிநீருக்கோ கர்நாடக அணைகளில் உள்ள நீர்போதாது. எனவே காவிரி ஆணையம் நதி நீரைப் பங்களிப்பது தொடர்பான முக்கிய முடிவை எடுக்க வேண்டும்என்றார்.
கடந்த இரண்டு முறை காவிரி ஆணையக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போதாவது குறைந்தது மூன்றுமாநில முதல்வர்களுடன் இந்தக் கூட்டம் நடக்குமா?
-->












Click it and Unblock the Notifications