சிறார் புலிகள்: சந்திரிகா மீண்டும் புகார்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களைத் தொடர்ந்து சேர்த்து வருவதாக இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களைச் சேர்த்து வருவதாகப் பல ஆண்டுகளாகவே புகார் வந்துகொண்டிருக்கிறது. சந்திரிகாவும் பலமுறை இது தொடர்பாகப் புலிகளைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கையின் 55வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு சந்திரிகா உரையாற்றுகையில்,
புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களையும் சிறுமிகளையும் சேர்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி பலமுறை நான்எச்சரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் புலிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை.
இலங்கை அமைதிக்கான முயற்சிகளில் நானும், ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ந்து உதவி வருகிறோம்.
ஆனால் புலிகள் இயக்கத்தில் சிறுவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்த வருவது பேச்சுவார்த்தைமுயற்சிகளையே பாதிக்கலாம். மேலும் இலங்கையின் எதிர்காலமும் இதனால் பாதிப்படையுமோ என்று நான்அஞ்சுகிறேன்.
எனவே புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறார்களைச் சேர்த்துக் கொள்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
போரைப் பின்னுக்குப் புறந்தள்ளி விட்டோம். இனி இலங்கை மக்களின் ஒவ்வொருவருடைய உரிமைகளும்அவர்களுக்குக் கிடைப்பதற்கான முயற்சிகளில்தான் அனைவரும் ஈடுபட வேண்டும்.
அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. நாம் அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்சந்திரிகா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications