அமெரிக்க கோவில்களில்சிறப்பு பிரார்த்தனை
லாஷிங்டன்:
மறைந்த கல்பனா சால்வாவுக்கும், பிற விண்வெளி வீரர்களுக்கும் வாஷிங்டனிலும் ஹூஸ்டனிலும் உள்ள கோவில்களில் அஞ்சலிசெலுத்தும் சிறப்புப் பிரார்தனைகள் நடைபெற்றன.
வாஷிங்டனில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் நடைபெற்ற இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லலித் மான்சிங்கும் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தின்ர்.
விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு மையம் அமைந்துள்ள ஹூஸ்டனில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் மறைந்த வீரர்களின் ஆன்மாசாந்தியடைய சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதே போல அமெரிக்காவில் பல கோவில்களிலும் தேவாலயங்களிலும் வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.கென்னடி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஜான்சன் விண்வெளி நிலையம், விண்வெளி மியூசியங்கள் உள்பட விண்வெளி தொடர்பானஅனைத்து மையங்களிலும் ஆயிரக்கனக்கான மக்கள் கூடி மெழுகுவர்த்திகளை ஏற்றியும் மலர்களை வைத்தும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதற்கிடையே இந்த ராக்கெட் விபத்தில் இறந்த இஸ்ரேலிய விண்வெளி வீரர் இலான் ரமோனின் மனைவி, நாஸா ஆராய்ச்சி மையத்தைப்பாராட்டியுள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் பேசிய அவர்,
எனது கணவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய இழப்பு தான். ஆனால், நாஸாவுக்கு ஏற்பட்ட இழப்பு அதைவிடப்பெரியது. கடந்த 15 நாட்களும் என கணவர் வானத்தில் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். அந்த மகிழ்ச்சியை நாஸா தவிர வேறு யாரும்தந்திருக்க முடியாது.
மறைந்த 7 வீரர்களும் வானத்தில் சேர்ந்துவிட்ட தேவதைகள் என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications