புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை எதிர்த்து மேதா பட்கர் போராட்டம்
சென்னை:
சென்னை கடற்கரைச் சாலையில் மீனவர்களின் குடிசைகளை அகற்றி விட்டு புதிய தலைமைச் செயலகம்அமைக்கடவிருப்பதைக் கண்டித்து சுற்றுச் சூழல் ஆர்வலரும் சமூக சேவகியுமான மேதா பட்கர் தலைமையில்இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
கடற்கரைச் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கும் விவேகானந்தா இல்லத்திற்கும் இடையில் உள்ள பகுதியில்அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மீனவர்களின் குடிசைகள் உள்ளன. அவற்றை அகற்றி விட்டுத்தான் தமிழகஅரசு புதிய தலைமைச் செயலகத்தை அங்கு அமைக்கவுள்ளது.
தலைமைச் செயலகம் தவிர சில வெளிநாட்டுத் தூதரகக் கட்டடங்களையும் இவ்விடங்களில் கட்டுவதற்கு அரசுமுடிவு செய்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் இம்முடிவைக் கண்டித்து மேதா பட்கர் தலைமையில் இன்று நூற்றுக்கணக்கான மீனவகுடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை-பூங்காநகரில் உள்ள மெமோரியல் ஹால் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மேதா பட்கர், மீனவர்களின் குடிசைகளை அகற்றி விட்டு புதிய தலைமைச் செயலகத்தையோ,வெளிநாட்டுத் தூதரகக் கட்டடங்களையோ கட்டுவது தமிழக அரசின் முட்டாள்தனமான முடிவு. அதைஎதிர்த்துத்தான் நாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளோம் என்றார்.
மீனவர் பாதுகாப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மேதா பட்கர் உள்ளிட்டஅனைவரும் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications