விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

புறப்படும்போதே இடது புற இறக்கையில் சேதம் ஏற்பட்டதால், கொலம்பியா ராக்கெட் தரையிறங்கிக் கொண்டிருந்தபோதுஅதைச் சுற்றி மிக அதிகமான வெப்ப நிலை ஏற்பட்டதாக நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தான்அது வெடித்துச் சிதறியிருக்க வேண்டும் என்றும் நாஸா கருதுகிறது.

கடைசி 5 நிமிடங்களில் கொலம்பியாவின் நடுப் பகுதியில் வழக்கத்தைவிட 32 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலைஏற்பட்டதாக நாஸா ஷட்டில் ராக்கெட் தலைவர் ரான் டெட்டிமோர் கூறினார்.

அவர் கூறுகையில், இந்த வெப்ப நிலை அதிகரிப்பால் ராக்கெட்டைச் சுற்றியுள்ள வெப்பத்தைத் தாங்கும் உறை சேதமடைந்தது.இதையடுத்து ராக்கெட்டின் அதிகமான வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்தது. அப்போது ராக்கெட்டின் கம்ப்யூட்டர் வேகத்தைக்கட்டுப்படுத்த அதனை வலது புறமாகத் திருப்பியது.

அதிவேகத்தில் அங்கும் இங்கும் திருப்பப்பட்டதால் அது வெடித்துச் சிதறியிருக்கலாம். ஆனால், ராக்கெட் சிதறப் போகிறதுஎன்பதை தரைக் கட்டுப்பாட்டு நிலையமும் உணரவில்லை, கொலம்பியாவில் இருந்த வீரர்களும் உணரவில்லை என்றார்.

மேலும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்போதே எரிபொருளை அதில் ஏற்றிய டியூபின் சிறிய பகுதி தெரித்து ராக்கெட்டின்இடது இறக்கையில் ஒட்டிக் கொண்டது. அப்போதே ராக்கெட்டின் வெப்ப நிலையைத் தாங்கும் உறையில் சேதம்ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் இதனால் அதிக பாதிப்பு ஏற்படாது என்று கருதப்பட்டதால் ராக்கெட் ஏவப்பட்டது.

ஆனால், கொலம்பியா வெடித்துச் சிதறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக இடது இறக்கையில் உள்ள வெப்பத்தை உணரும்சென்சார்கள் செயலிழந்துள்ளன. இதற்கும் எரிபொருள் டியூப் இறக்கையில் ஒட்டியதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்றும்ஆராயப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நாஸாவிலேயே சில மூடி மறைக்கும் வேலைகளும் ஆரம்பித்துள்ளன. ஷட்டில் ராக்கெட்டுக்கான எரிபொருள்டேங்கைத் தயாரித்து வழங்கிய லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நாஸா மீது குற்றம் சாட்டியுள்ளது. தங்களிடம் வாங்கிய பழையஎரிபொருள் டாங்கை நாஸா பயன்படுத்தியதாக அந் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், கொலம்பியா ராக்கெட்டில் புத்தம் புதிய சூப்பர் லைட் டேங்க் பயன்படுத்தப்பட்டதாக நாஸாவின் ஆவணங்களில்குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

டெக்ஸஸ் மீது 2,07,000 அடி உயரத்தில் வினாடிக்கு சுமார் 8 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருந்தபோது கொலம்பியாவெடித்துச் சிதறியது.

ராக்கெட்டின் இடது இறக்கைப் பகுதியில் எரிபொருள் டியூபினால் புறப்படும்போதே பிரச்சனை ஏற்பட்டதால் அதை நாஸா ஏன்தரையில் இருந்தவாரே ஆராயவில்லை என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. தரையில் இருந்தே அதிக சக்தி வாய்ந்ததொலைநோக்கிகளால் கொலம்பியா ராக்கெட்டின் இறக்கையை சோதித்திருக்க முடியும்.

இல்லாவிட்டால் கொலம்பியாவை வானில் தலைகீழாகக் கவிழ்த்தி அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்களின்தொலைநோக்கிகள் மூலம் சோதனை செய்திருக்க முடியும். அதுவும் இல்லாவிட்டால் இப்போது விண்ணில் உள்ள சர்வதேசவிண்வெளி நிலையத்தில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் சோதனையிட்டிருக்க முடியும். இது எதுவும் செய்யப்படவில்லை.

அப்படியேயே சோதனை செய்து இறக்கையில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட ஒன்றும் செய்திருக்கமுடியாது என நாஸா கூறியுள்ளது. இறக்கையை சரி செய்யும் கருவிகளோ, உதிரிப் பாகங்களோ கொலம்பியாவில்இருக்கவில்லை என நாஸா தெரிவித்துள்ளது.

சேதமான இறக்கையுடன் இந்த ராக்கெட்டால் தரையிறங்க முடியாது என்பது தெரிந்திருந்தால் வீரர்கள் வெளியில் குதித்துஅவர்களை பிற ராக்கெட்டுகள் மூலம் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற தியரிகளும் விவாதங்கள் தொடங்கியுள்ளன. ஆனால்,இதெல்லாம் ஆங்கில சினிமாவில் தான் சாத்தியம் என முன்னாள் விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர்.

ராக்கெட்டை விட்டு வீரர்கள் வெளியேறிருந்தால் உடனே அவர்களை அடைய ராக்கெட்டை அனுப்ப முடியாது. ஷட்டில்ராக்கெட்டை விண்ணில் ஏவத் தயார் செய்ய குறைந்தபட்சம் 4 மாதமாகும்.

இதனால் ராக்கெட்டை விட்டு அவர்கள் வெளியேறி இருந்தால் விண்வெளியிலேயே இறந்துபோய், சில மாதங்கள் விண்ணில்சுற்றிவிட்டு, எரிந்தபடியே அவர்கள் பூமிக்குள் இழுக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் சில மாதங்கள் விண்ணில் மிதப்பதைக் கூடதரையில் இருந்தவண்ணம் நாம் பார்த்துக் கொண்டே இருந்திருக்க முடியும் என்கின்றனர்.

ஆனால், அவசர காலத்தில் ஒரு வாரத்தில் அடுத்த ராக்கெட்டை அனுப்பியிருக்க முடியும் எனவும் சில வீரர்கள் கூறுகின்றனர்.

கொலம்பியா ராக்கெட் வீரர்கள் இப்போது வானில் சுற்றி வரும் உள்ள விண்வெளி நிலையத்துக்குள் பாதுகாப்பாககுடியேறியிருக்கவும் வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்த இரு கலன்களுமே வெவ்வேறு ஆர்பிட்களில் (சுற்றுப் பாதைகளில்)சுற்றி வந்தன. விண்வெளி நிலையத்தை அடைய கொலம்பியாவில் போதிய எரிபொருள் இல்லை. மேலும் அந்த நிலையத்துடன்ஏர்-டைட் தொடர்பை ஏற்படுத்தும் வசதியும் கொலம்பியாவில் இல்லை.

விண்வெளி நிலையத்தின் அருகே சென்று ஸ்பேஸ் வாக் மூலம் இவர்கள் உள்ளே சென்றிருக்கலாம் எனவும் சில முன்னாள் வீரர்கள்கூறியுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+