கோவை காவலர் மீண்டும் சாதனை: 32 அடி கோபுரத்திலிருந்து சொய்ய்ய்ங்...
சென்னை:
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆயுதப் படை போலீஸ்காரரான வேல்முருகன் 32 அடி உயர கோபுரத்திலிருந்து நீர்த்தொட்டியில் குதித்து சாதனை படைத்தார்.
கடந்த டிசம்பர் 8ம் தேதி சென்னை துறைமுகத்தில் 126 அடி உயரத்திலிருந்து கடல் நீரில் குதித்து வேல்முருகன்சாதனை புரிந்தார்.
இந்நிலையில் சென்னை-ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் உள்ள 32 அடி உயர கோபுரத்திலிருந்து நீர்நிரப்பப்பட்ட தொட்டிக்குள் குதிக்க முடிவு செய்தார்.
இதற்காக 12 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட ஒரு நீர்த் தொட்டியில் 27 செ.மீ. உயரத்திற்கு நீர்நிரப்பப்பட்டது.
பின்னர் நேற்று மாலை 4.30 மணிக்கு 32 அடி கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற வேல்முருகன், அந்த நீர்த்தொட்டியில் குதித்து புதிய சாதனை படைத்தார்.
இத்துடன் 11 சாதனைகளைப் புரிந்துள்ள வேல்முருகன் நிருபர்களிடம" கூறுகையில், இதற்கு முன் அமெரிக்காவின்டேனி ஹிக்கின்போதம் என்பவர் 29 அடி உயரத்திலிருந்து 30 செ.மீ. உயர நீர்த் தொட்டியில் குதித்து சாதனைபடைத்தார்.
அந்தச் சாதனையை நான் முறியடித்துள்ளேன். இதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆளியாறுஅணைக்கட்டில் மூன்று மாதங்களாகச் சிறப்பு பயிற்சி எடுத்தேன்.
அடுத்ததாக தொடர்ந்து 1,008 மணி நேரம் தொடர்ந்து ஓடி, ஆஸ்திரேலிய வீரரின் 1,000 மணி நேர தொடர்ஓட்டச் சாதனையை முறியடிக்கப் போகிறேன்.
மேலும் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி தமிழகத்தின் பல மாவட்டங்கள் வழியாக 72 நாட்கள் ஓடிபொதுமக்களிடமிருந்து ரூ.1 கோடி வரை நிதி வசூல் செய்து, தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டம், அனாதைக்குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் நலனுக்காக அதை அளிக்கவுள்ளேன் என்றார் வேல்முருகன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications