புஷ்சுடன் டெலிபோனில் பேசினார் வாஜ்பாய்
டெல்லி:
அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியதில் இந்தியாவின் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7விண்வெளி வீரர்கள் இறந்தது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் பிரதமர் வாஜ்பாய்தொலைபேசியில் பேசினார்.
நேற்று இரவு புஷ்சுக்கு டெலிபோன் செய்த வாஜ்பாய் பேசுகையில், ஏழு விண்வெளி வீரர்கள் இறந்த சோகத்தில்இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்கிறது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனாவும் இறந்தது எங்களுக்குக் கூடுதல் சோகத்தை அளிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்களால் அமெரிக்கா பின்வாங்கி விடாமல் விண்வெளி ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தவேண்டும். அவ்வாறு நடத்தினால் எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கைஎனக்கு உள்ளது என்றார் வாஜ்பாய்.
பதிலுக்குப் பேசிய புஷ், இந்திய வீராங்கனை கல்பனாவின் பெருமைகளை எடுத்துக் கூறினார். மகத்தான இந்தியநாட்டில் பிறந்த வீரப் பெண்மணி கல்பனா சாவ்லா என்று அப்போது வாஜ்பாயிடம் புஷ் கூறினார்.
வாஜ்பாய் அனுப்பிய இரங்கல் கடிதத்திற்கும் புஷ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக, அமெரிக்க நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய புஷ், கொலம்பியாவில் பயணம்செய்த ஏழு விண்வெளி வீரர்கள், வீராங்கனைகள் அனைவரையும் "ஹீரோக்கள், ஹீரோயின்கள்" என்றுவர்ணித்தார்.
எந்த நோக்கத்திற்காக அவர்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டார்களோ, அது தொடர்பான ஆய்வுகள்தொடர்ந்து நடைபெறும் என்றும் புஷ் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications