வரலாறு காணாத அளவுக்கு "கிடுகிடு"வென உயர்ந்தது தங்கம் விலை
சென்னை:
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரத் தொடங்கியுள்ளது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.555க்குவிற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளியிலிருந்தே தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. அதன்பின்னர் வந்த கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டியும் தங்கத்தின் விலை மளமளவென்று அதிகரித்தது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.516ஆக உயர்ந்த போது, தங்கநகை வியாபாரிகளே கூட திணறித்தான் போனார்கள்.
புத்தாண்டுக்குப் பின்னர் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சர்வதேச சந்தையில்அமெரிக்காவின் டாலர் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து தங்கத்தின் விலைமேலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட போதிலும் தங்கத்தின் விலைஏறுமுகத்திலேயே இருந்தது.
இந்நிலையில் இன்று காலை வணிகம் தொடங்கியபோது தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.545ஆக இருந்தது.
பின்னர் மளமளவென்று ரூ.565 வரை உயர்ந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்றைய வணிகத்தின் நிறைவில்ரூ.555ஆக இருந்தது.
சுத்தத் தங்கமான 24 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.599ஆக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறிய சென்னைநகை வியாபாரிகள் சங்கத் தலைவரான பாண்டுரங்கன், அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும் வரை தங்கத்தின்விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
-->
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications