தமிழகத்துக்கு 4,500 கன அடி நீர் விட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையக் கூட்டம் நடக்கும் வரைதினமும் இந்த அளவு நீரைத் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தருவது என்பது குறித்து வாஜ்பாய் இறுதிமுடிவெடுக்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடகர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த 1ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்தது.
ஆனால், தமிழகத்திற்கு நீர் தர முடியாது என்று கூறி நேற்று முன் தினம் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. நீதிபதி லஹோட்டி, நீதிபதி சாபர்வால் மற்றும் நீதிபதி அரிஜித்பசாயத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் கூறுகையில்,
வரும் 10ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே சம்பா பயிர்கள்கருகிக் கொண்டிருக்கின்றன. 10ம் தேதிக்கு மேல் கர்நாடகம் நீர் திறந்து விட்டால் அந்த நீர் மேட்டூர் அணையைச்சென்று சேருவதற்கே 15ம் தேதி ஆகிவிடும். அதன் பின்னர் காவிரி டெல்டா பகுதிகளுக்கு அந்த நீர் 22ம்தேதிதான் சென்று சேரும்.
அதற்குள் சம்பா பயிர்கள் முழுவதுமாகக் கருகிப் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே மிஞ்சி இருக்கும் சம்பாபயிர்களைக் காப்பாற்ற வரும் 10ம் தேதி வரை (அதாவது காவிரி ஆணையம் கூடும் வரை) தினமும் 4 டி.எம்.சி.நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து, காவிரியில் தினமும் தமிழகத்திற்கு எவ்வளவு நீரைத் திறந்துவிடலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர், செயலாளர் மற்றும் முன்னாள் செயலாளர் ஆகியோர்உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கண்காணிப்புக் குழு தலைவர் ஏ.கே. கோஸ்வாமி மற்றும் இக்குழுவின் முன்னாள் செயலாளர்ஆர்.கே. ஷர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பிற்பகலில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் தமிழகத்திற்குத்திறந்துவிடப்பட வேண்டிய நீரின் அளவு குறித்துக் கேட்டறிந்தனர்.
அவர்களுடன் நீதிபதிகள் சுமார் 40 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தினர். கர்நாடக அணைகளில் உள்ள நீரின்இருப்பு குறித்தும், தமிழகத்திற்குத் தேவையான நீரின் அளவு குறித்தும் அப்போது கண்காணிப்புக் குழுவினரிடம்நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
பின்னர் மத்திய அரசின் வழக்கறிஞர் சோலி சோராப்ஜியிடமும் விவரங்களைக் கேட்டனர்.
விசாரணையின் முடிவில் காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவேண்டும் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டனர்.
காவிரி ஆணையக் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்று வரை தினமும் இந்த நீரைக்கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications