முதல்வர்கள் வராவிட்டாலும் காவிரி ஆணையத்தை கூட்டலாம்: உச்ச நீதிமன்றம்
டெல்லி:
வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்தேவையான "கோரம்" இல்லாவிட்டாலும் ரத்து செய்யப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் பிரதமர் எடுக்கும் முடிவை நாங்கள் எடுக்கும் முடிவாகவே கருத வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காவிரி வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி இன்று உச்சநீதிமன்றத்தில் வாதாடுகையில்,
காவிரி ஆணையக் கூட்டங்களில் தமிழக, கர்நாடக, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின்முதல்வர்களில் குறைந்தது மூன்று பேராவது கலந்து கொள்ள வேண்டும் என்பது காவிரி நடுவர் மன்றத்தின் விதி.
ஆனால் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை சில முதல்வர்கள் கலந்து கொள்ளாததால் கூட்டம் இரண்டு முறைரத்து செய்யப்பட்டது. எனவே வரும் 10ம் தேதி போதிய கோரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவிரிஆணையக் கூட்டம் கட்டாயம் நடைபெற்றே ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்சொராப்ஜி.
இதன் பின்னர் நீதிபதி லஹோட்டி, நீதிபதி சாபர்வால் மற்றும் நீதிபதி அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தன் தீர்ப்பில் கூறுகையில்,
காவிரி ஆணையக் கூட்டத்தில் எந்த மாநில முதல்வர் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட அந்தக் கூட்டம் தொடர்ந்துநடைபெறும். இதைக் காரணம் காட்டி ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்கக் கூடாது. கூட்டத்தில் ஆணையத்தின்தலைவரான பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றனர்.
வரும் 10ம் தேதி நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக முதல்வர்கள் கலந்துகொள்வார்கள் என்று இரு மாநில அரசு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்திடம் உறுதி அளித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications