இலங்கை: நாளை ஜெர்மனியில் 5வது சுற்று அமைதி பேச்சு
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 5வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரில் தொடங்குகின்றன.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது, புலிகள் இயக்கத்தில் சிறுவர்கள், சிறுமிகள்சேர்க்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்பான பிரச்சனை மற்றும் சில மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளும்விவாதிகக்கப்படவுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப. தமிழ்ச்செல்வனும், ராணுவப் பிரிவுத் தலைவர் கருணாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே பெர்லின் சென்று விட்டனர்.
இந்நிலையில் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஜி.எல். பெய்ரிஸ் நேற்று பெர்லின்கிளம்பிச் சென்றார்.
புலிகளின் அரசியல் ஆலோசகரும் புலிகள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஆன்டன் பாலசிங்கமும்அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும் இன்று லண்டனிலிருந்து நேரடியாக பெர்லின் சென்று விடுவார்கள்.
பாலசிங்கத்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே பேச்சுவார்த்தை தாய்லாந்திலிருந்து ஜெர்மனிக்குமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெர்லினில் நான்கு நாட்கள் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைஇதே காரணத்துக்காக இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜப்பானில் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்குகின்றன என்பதும்நினைவு கூறத்தக்கது.
புலிகளின் ராணுவப் பிரிவில் சிறார்களைச் சேர்ப்பது தொடர்பாகத் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த "யூனிசெப்"பின் தலைவர்களும் ஜெர்மனிக்கு விரைகின்றனர்.
சிறார்களை இனி எங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டோம் என்று எழுத்து பூர்வமான உறுதிமொழியை "யூனிசெப்"அமைப்புக்கு புலிகள் வழங்குவார்கள் அப்போது வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்தில் உள்ள சிறுவர்களையும் சிறுமிகளையும் மீட்டு, அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தைஅமைப்பது தொடர்பான நடவடிக்கைகளிலும் "யூனிசெப்" ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications