மதுரை உயர் நீதிமன்ற கட்டடம்: திமுக செய்த ஊழல்
மதுரை:
திமுக ஆட்சியில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக் கட்டடம் கட்ட காண்ட்ராக்டர்களுக்கு டெண்டர்கள் விட்டதில்மாபெரும் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த விவரங்கள் இப்போது தான் வெளிவர ஆரம்பித்துள்ளன.
மதுரை உலகனேரி பகுதியில் ரூ.40 கோடி மதிப்பில் உயர் நீதிமன்றக் கிளைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
முக்கால்வாசிக்கும் மேலான கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது கட்டுமானப் பணியில்டெண்டர் விட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் இந்தக் கட்டடப் பணிகள் தொடங்கின. இதில் தான் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக புகார்கள் குவிந்ததையடுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை கட்டடத்தை ஊழல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
கட்டடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட சிமெண்ட், இரும்பு, செங்கற்கள், மார்பிள் கற்கள் உள்ளிட்டவற்றைஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
சோதனையின்போது அங்குள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் பல்வேறு போலி பில்கள், முறைகேடாகத்திருத்தப்பட்ட ஆவணங்களும் சிக்கியுள்ளன.
மேலும், சில காண்டிராக்டர்களிடமிருந்து ரூ.50,000 வரை அன்பளிப்பாக பெற்றதாக பொதுப்பணித் துறைமேற்பார்வை பொறியாளர் ஒருவர் ஒத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் மதுரை உயர் நீதிமன்றக் கிளை செயல்படத் தொடங்கும் என சமீபத்தில்தான்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் திமுக ஆட்சியில் நடந்த இந்த ஊழல்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications