சாத்தான்குளம் இடைத் தேர்தல்: 2 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்காக 2 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை அணுசக்தித் துறை இணைச் செயலாளரான வி.பி. ராஜா, பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அன்சுலிஆர்யா ஆகியோர்தான் தேர்தல் கமிஷனின் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜா தூத்துக்குடியை வந்தடைந்துள்ளார். அவர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், சாத்தான்குளம் தொகுதி தேர்தல் அதிகாரி, காவல் துறைக்கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மற்றொரு பார்வையாளரான அன்சுலி ஆர்யா நாளை இங்கு வருகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர்தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications