சென்னை சிறையில் பரிதியை சந்தித்தார் கருணாநிதி
சென்னை:
சட்டசபையில் நடந்த மோதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதிமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதியை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று காலை சந்தித்துப்பேசினார்.
சட்டசபையில் த.மா.கா.கா. தலைவரான டாக்டர் குமாரதாஸை அடிக்கப் பாய்ந்ததோடு நில்லாமல், அவரைக்கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறி தமிழக அரசு அளித்த புகாரின் பேரில் பரிதியைப் போலீசார் கைதுசெய்தனர்.
பின்னர் பரிதி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு, அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை மத்திய சிறைக்குச் சென்ற கருணாநிதி, அங்கு அடைக்கப்பட்டுள்ள பரிதியைச்சந்தித்துப் பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டனர்.
சிறிது நேரம் பேசிய பின்னர் கருணாநிதி சிறையை விட்டுச் சென்றார்.
பரிதி கைதுக்கு வெங்கய்யா கண்டனம்:
இதற்கிடையே பரிதியைக் கைது செய்துள்ளது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று பாரதீய ஜனதாகட்சியின் அகில இந்தியத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகுதான் திமுக உறுப்பினர் பரிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.சட்டசபையின் மரபு காக்கப்பட வேண்டும் என்றார் வெங்கய்யா.
பரிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய பா.ஜ.க. பொதுச் செயலாளரான இல.கணேசன் சமீபத்தில்தான் கண்டித்துப் பேசினார். இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த எதிர்க் கட்சிக்கூட்டத்திற்கு பா.ஜ.க. அழைக்கப்படாததைத் தொடர்ந்தே அவர் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதை விட்டுசிறிது இறங்கி வந்தார்.
இந்நிலையில் பரிதி கைது சம்பவத்திற்கு வெங்கய்யா இன்று கண்டனம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.அவர் மேலும் நிருபர்களிடம் கூறுகையில்,
பொடா சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் அதை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்குப்பயன்படுத்தக் கூடாது என்பதை நாங்கள் உறுதியாகக் கூறி வருகிறோம்.
அது தமிழகமாக இருந்தாலும் ச. உ.பியாக இருந்தாலும் சரி. பயங்கரவாதத்தை அழிக்க மட்டுமே அந்தச் சட்டம்பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாதம்தான் இப்போதைய முக்கியப் பிரச்சினை. எனவே நாட்டின் பல்வேறுபகுதிகளில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினரை, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தினரைவெளியேற்ற அனைத்துக் கட்சிகளும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இதற்காகவே, வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியர்கள் இந்தியாவுக்குள்அனுமதிக்கப்படவில்லை என்றார் வெங்கய்யா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications