திருமண மண்டபத்தில் மணமகனிடம் நகை, பணம் திருடிய "பலே" நபர்
சென்னை:
சென்னையில் திருமண மண்டபத்திற்கு ஏ.சி. மெக்கானிக் போல நடித்து மணமகனின் அறையில் வைத்திருந்த 20பவுன் தங்க நகைகள், ரூ.50,000 பணத்தைத் திருடிச் சென்ற நபரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை முத்துராமலிங்கத் தேவர் சாலை (சேமியர்ஸ் சாலை) பகுதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவரதுமகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது.
மந்தைவெளிப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கல்யாணம் நடைபெறுவதாக இருந்தது. மாப்பிள்ளைஸ்ரீநாத் பெங்களூரைச் சேர்ந்தவர். கல்யாணத்தையொட்டி திருமணத்திற்கு முதல் நாளே குடும்பத்துடன் கல்யாணமண்டபத்திற்கு அவர் வந்து விட்டார்.
நேற்று முன்தினம் இரவு தனக்கு ஒதுக்கப்பட்ட ஏ.சி. அறையில் அவர் படுத்திருந்தார். நள்ளிரவுக்கு மேல் ஏ.சி.வேலை செய்யாததால் அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் அவருடைய அறையில் இருந்த பொருட்களும் ஸ்ரீநாத்தின் புது அறைக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.அப்போது ஏ.சி. மெக்கானிக் என்று தன்னைக் கூறிக் கொண்டு வந்த ஒருவரும் அங்கு வந்து பொருட்களைமாற்றுவதற்கு உதவினார்.
பின்னர் பொருட்களைச் சரிபார்த்தபோது, 20 பவுன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கப் பணம் இருந்த பெட்டியைக்காணவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ந்து போன மணமகன் வீட்டார், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது, ஏ.சி. மெக்கானிக்காக வந்தவர்தான் நகை, பணத்தை திருடிக்கொண்டு போயிருக்கலாம் என்று தெரிய வந்தது.
அந்த நபர் யார் என்றே தெரியாது என்று அனைவரும் கூறியதால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. அவரைப்போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications