ஒரே குடும்பமா? "டூ-வீலரில்" 3 பேர் போகலாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
இரு சக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்யவேண்டும். 3வதாக சட்டவிரோதமாக அதில் பயணம்செய்யும் ஒருவர் விபத்தில் இறந்தால் அவருக்காக நஷ்ட ஈடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம்கூறியுள்ளது.
அதே நேரம் கணவன், மனைவியுடன் 12 வயதுக்குட்பட்ட குழந்தையும் ஒரே வாகனத்தில் பயணம் செய்தால் அதுசட்ட விரோதமாகாது என்றும் அது கூறியுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த வர்ஜலால். கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி தன்னுடைய இரண்டுநண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த 3 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள்மீது அரசுப் போக்குவரத்துக்கழக பஸ் மோதியது. இதில் வர்ஜலால் இறந்தார்.
இறந்த வர்ஜலால் குடும்பத்திற்கு ரூ.2.20 லட்சம் நஷ்ட ஈடு தருமாறு கோயம்புத்தூர் மோட்டார் வாகன விபத்துஇழப்பீட்டு நடுவர் மன்றம், அரசுப் போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுப் போக்குவரத்துக்கழகம் மேல் முறையீடு செய்தது.
தனது அப்பீல் மனுவில், மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம். ஓட்டுநர் தவிர கூடுதலாக ஒருவர்மட்டுமே அமரலாம். 2 பேர் அமர்ந்து சென்றால் அது சட்ட விரோதமானது. எனவே நஷ்ட ஈடு வழங்க முடியாதுஎன்று அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஜெகதீசன் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற பெஞ்ச்தன்னுடைய தீர்ப்பில்,
இரு சக்கர வாகனம் என்றால் அதில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும்.
ஆனால் இப்போதெல்லாம் மூன்ற பேர் அல்லது நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்வது அதிகரித்து விட்டது.இதைத் தடுக்க வேண்டிய கடமை காவல் துறைக்குத்தான் உள்ளது. அவர்களது அலட்சியப் போக்கு காரணமாகஇந்தச் செயல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.
இந்த வழக்கில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் தரப்பில் தவறு இருப்பதால் பாதிக்கப்பட்டவரின்குடும்பத்திற்குப் பாதியளவு நஷ்ட ஈடு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதாவது ரூ.1.10 லட்சம் வழங்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இருப்பினும் கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதை சட்ட விரோதம்என்று சொல்ல முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
அதேசமயம், கணவன், மனைவியுடன், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் வழக்கமான சட்டம்பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.-
-->












Click it and Unblock the Notifications