ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்ற அன்பழகன் கோரிக்கை
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக ரூ.67 கோடி சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ளசொத்துக் குவிப்பு வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக ஜெயலலிதா,அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிராஜமாணிக்கம் இவ்வழக்கை விசாரித்து வருகிறார். அரசு தரப்பில் கடைசி சாட்சியான லஞ்ச ஒழிப்புத் துறையில்பணிபுரிந்த போலீஸ் அதிகாரியான நல்லம்ம நாயுடு சமீபத்தில் சாட்சியளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, கடந்த 2000ம்ஆண்டிலேயே பெரும்பாலான விசாரணைகள் முடிவடைந்து விட்டன.
தற்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சஒழிப்புத் துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பல சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களை மாற்றிக் கூறிவிடும்அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழகம் அல்லாத வேறு மாநிலத்தில் ஒரு சுயேச்சையான அமைப்பின் மூலம் இவ்வழக்கு தொடர்பானவிசாரணையைத் தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என்று தன் மனுவில் அன்பழகன் கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications