சாத்தான்குளம்: தேர்தல் பணியில் மத்திய ஊழியர்களா?- தமிழக அரசு ஊழியர்கள் கண்டனம்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் பணிகளில் மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவுசெய்துள்ளதற்கு தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்களைப் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடைவிதித்துவிட்டது.
அதிமுகவினரின் நெருக்குதல்களுக்கும் அரசுக்கு ஆதரவான போலீசாரின் நெருக்குதல்களுக்கும் பயந்துதான்மாநில அரசு ஊழியர்கள் செயல்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.
எனவே தேர்தல் நடத்தும் பணியை மத்திய அரசு ஊழியர்களிடம் தந்து, மாநில அரசும் அதிமுகவினரும்முறைகேடுகள் செய்வதைத் தடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சாத்தான்குளம் இடைத் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்களுக்குப் பதிலாக மத்திய அரசுஊழியர்களைப் பயன்படுத்த மாநில தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி முடிவு செய்துள்ளார்.
ஆனால் தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை மாநில அரசு ஊழியர்கள் கண்டித்துள்ளனர். இது தொடர்பாகமாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 50 ஆண்டு காலமாக இடைத் தேர்தலாக இருந்தாலும் சரி. பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி. தமிழகஅரசு ஊழியர்கள்தான் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நடைமுறைக்கு மாறாக தற்போது முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தமுடிவு செய்துள்ளது மாநில அரசு ஊழியர்களை அவமானப்படுத்துவது போல உள்ளது.
அரசுப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு அரசியல் சாயம் பூச தேர்தல் கமிஷன் முனைந்துள்ளதுகடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவ்வறிக்கையில் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
சாத்தான்கும் தேர்தலுக்கான மத்தியப் பார்வையாளர்களாக அணுசக்தித் துறை இணைச் செயலாளர் வி.பி. ராஜா,பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் அன்சுலி ஆர்யா ஆகியோர் சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications