இலங்கையில் புலிகள் ராக்கெட் வீச்சு: ராணுவம் உஷார்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 கடற்புலிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவ்வியக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகள் ராக்கெட்டுகளை வீசி,மோர்ட்டார் ரக குண்டுகளையும் வெடித்துள்ளனர்.
இதையடுத்து இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் வடக்கு, கிழக்கு இலங்கையின் பல இடங்களில் புலிகள்ராக்கெட்டுகளை வீசி, மோர்ட்டார் ரக குண்டுகளையும் வெடித்துள்ளனர்.
ஆனாலும் இதனால் எந்தவிதமான உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. மேலும் தற்கொலை செய்து கொண்டபுலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடிகள்கட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே புலிகளும் இலங்கை அரசும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், இந்த மூன்று கடற்புலிகளும்அவசரப்பட்டே தற்கொலை முடிவை எடுத்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
நார்வே கண்காணிப்புக் குழுவினர் படகை சோதனை செய்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் இது தொடர்பானதகவல் அந்த கடற்புலிகளுக்கு சரியாகத் தெரிவிக்கப்படவில்லை. அதனால்தான் அவர்கள் அவசரப்பட்டுதற்கொலை முடிவைத் தேடிக் கொண்டனர் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடந்து விடாத வகையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும்புலிகளும், அரசு தரப்பினரும் உறுதியெடுத்துக் கொண்டனர்.
5வது அமைதி பேச்சுகள் முடிந்தன:
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக ஜெர்மனியில் நடந்து வந்த 5வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்இன்றுடன் முடிவடைந்தன.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்று ஜெர்மனியின்தலைநகரான பெர்லினில் தொடங்கவிருந்தன.
இந்நிலையில்தான் நேற்று அதிகாலை யாழ்ப்பாண கடல் பகுதியில் விமான எதிர்ப்பு துப்பாக்கி உள்ளிட்டஆயுதங்களுடன் சென்ற கடற்புலிகளின் படகை இலங்கை கடற்படையினர் வழிமறித்தனர்.
இதையடுத்து நார்வே கண்காணிப்புக் குழுவினர் வந்து அந்தப் படகைச் சோதனையிட்டதில் அதில் விமானஎதிர்ப்பு துப்பாக்கி இருப்பதைக் கண்டனர். அவர்கள் இலங்கைக் கடற்படைக்குத் திரும்பிய நிலையில் தங்கள்படகுக்குத் தீவைத்த புலிகள் தங்கள் உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலைசெய்து கொண்டனர்.
மீன் பிடிப்பதற்காகத்தான் புலிகள் அந்தப் படகில் சென்று கொண்டிருந்ததாகக் கூறிய புலிகள்,பாதுகாப்புக்காகத்தான் அதில் துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் புலிகள் போர்நிறுத்தஒப்பந்தத்தை மீறிவிட்டதாக கண்காணிப்புக் குழுவினர் உறுதியாகக் கூறி விட்டனர்.
இதையடுத்தே அந்த மூன்று புலிகளும் தங்களை வெடித்து தற்கொலை செய்து கொண்டனர் என்று புலிகள்இயக்கம் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று ஜெர்மனியில் பேச்சுவார்த்தைகள் அரை மணிநேரம் தாமதமாகவே துவங்கின.
புலிகளுக்கும் இலங்கை அரசு தரப்பினருக்கும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்த போதிலும் நேற்றும்இன்றும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவே நடந்து முடிந்தன.
மனித உரிமைகள் மற்றும் சிறார் புலிகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள்ஜெர்மனியில் நடந்த பேச்சுக்களின் போது கையெழுத்தாகியுள்ளன.
உலக மனித உரிமை அமைப்பான "அம்னெஸ்டி இன்டர்நேஷனல்" அமைப்பின் முன்னாள் தலைவரான இயான்மார்டின் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளார்.
மேலும் சிறுவர், சிறுமிகளை இனி தங்கள் இயக்கத்தில் சேர்க்கப் போவதில்லை என்று புலிகள் அறிவித்துள்ளனர்.தற்போது புலிகள் இயக்கத்தில் உள்ள சிறார்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பைச்சேர்ந்த "யூனிசெப்" திட்டமிடவும் இரு தரப்பினரும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications