குடியாத்தத்தில் மஞ்சள் நிறத்தில் மழை: மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே மஞ்சள் நிறத்தில் மழை பெய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தத்தை அடுத்துள்ள பெரும்பாடி கிராமத்தில் கடந்த புதன்கிழமை மழை தூற ஆரம்பித்தது.

அப்போது மஞ்சள் நிறத்தில மழைத் துளிகள் விழுவதைக் கண்ட அந்தக் கிராம மக்கள் பதறிப் போயினர். ஏதோதெய்வக் குற்றம் காரணமாகத்தான் மஞ்சள் நிறத்தில் மழை பெய்வதாக அவ்வூர் பெரியவர்கள் பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 9 மணிக்கும் மஞ்சள் நிறத்தில் மழை பெய்வதைக் கண்ட அந்தக் கிராம மக்கள்மீண்டும் பரபரப்படைந்தனர். சுமார் ஐந்து நிமிடம் வரை இந்த மஞ்சள் மழை நீடித்தது.

அந்த மழை நீரைத் தொட்டுப் பார்த்தபோது அது மாவு போல இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். இந்த மஞ்சள்மழையில் நனைந்த சிலர் தங்கள் உடம்பில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து மக்கள் கடும் பீதியடைந்தனர். இது தொடர்பாக குடியாத்தம் தாசில்தார் கூறுகையில்,

பருவமழை மாற்றத்தின்போது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல் மஞ்சள் நிறத்தில் மழை பெய்யும்.

இது இயற்கையான ஒன்றுதான். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எனவே இதுகுறித்து யாரும்பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை என்றார்.

நேற்று இரவிலும் சிறிது நேரம் மஞ்சள் மழை பெரும்பாடியில் பெய்தது. அப்போது கீழே விழுந்து கொண்டிருந்தமழைத் துளிகள் தங்க நிறத்தில் ஜொலித்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

இந்த மஞ்சள் நிற மழை நீரின் சாம்பிள்கள் தற்போது அறிவியல் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.அவற்றைச் சோதனை செய்த பின்னர் மஞ்சள் நிறத்தில் மழை பெய்ததற்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+