சாத்தான்குளம் தேர்தல்: நீலமேகவர்ணம், மகேந்திரன் மனுக்கள் ஏற்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்மகேந்திரன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் 8 சுயேச்சைகளின் மனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை வேட்பு மனுக்களின் பரிசீலனைநடைபெற்றது.
தாக்கல் செய்யப்பட்ட 35 மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டன. இவற்றில் நீலமேகவர்ணம் மற்றும் மகேந்திரன்ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நீலமேகவர்ணத்தின் மீது கிரிமினல் வழக்கு ஒன்ற நிலுவையில் உள்ளதால் அவருடைய வேட்பு மனு ரத்துசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சுந்தரவள்ளி என்பவர் நேற்று கடைசி நேரத்தில் அதிமுகசார்பில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால் நீலமேவர்ணத்தின் வேட்பு மனுவை இன்று தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்துசுந்தரவள்ளி தன்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மொத்தம் எட்டு வேட்பு மனுக்கள் முறைப்படி தாக்கல் செய்யப்படாததால் அவற்றை தேர்தல்அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். மீதமுள்ள 27 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வரும் 10ம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலை3 மணிக்கு சாத்தான்குளம் தொகுதி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் 26ம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மார்ச் 1ம் தேதி வாக்குகள்எண்ணப்பட்டு, அன்று நண்பகலுக்கு முன்பே முடிவுகள் அறிவிக்கப்படும்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications