சாத்தான்குளம் இடைத் தேர்தல்: காங்கிரசுக்கு புதிய தமிழகம் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியால் தமிழகம் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பது என்று முடிவுசெய்துள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறனை விடுதலைசெய்ய அனைத்து எதிர்க் கட்சிகளும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.
-->












Click it and Unblock the Notifications