இன்று கூடுகிறது காவிரி ஆணையம்: ஜெ. டெல்லி சென்றார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லிபுறப்பட்டுச் சென்றார். பகல் 1மணிக்கு தனி விமானத்தில்அவர் டெல்லி புறப்பட்டார். அவருடன் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷும் உடன் சென்றார்.

முன்னதாக சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பொதுப்பணித்றை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிகாரிகள் டெல்லிசென்றனர். அதே விமானத்தில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியும் டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கேரள முதல்வர் அந்தோணி டெல்லி சென்று விட்டார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இன்று டெல்லிசென்றார்.

ஓரிரு மாநில முதல்வர்கள் வராமல் உரிய "கோரம்" இல்லாவிட்டாலும் ஆணையக் கூட்டத்தை நடத்த வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இக் கூட்டம் எப்படியும் நடக்கும்.

காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 4,500 கன அடி வீதம் நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 6ம் தேதி கர்நாடகஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 7ம் தேதி மாலை முதல் கர்நாடம் கபினி அணையிலிருந்துதமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் கருகிப் போய்விட்ட சம்பா பயிர்களைக் காப்பாற்ற இந்த நீர் போதாது என்றும் மிஞ்சியுள்ளபயிர்களைக் காப்பாற்ற மேலும் கூடுதல் நீர் வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இந்நிலையில் காவிரி ஆணையம் இன்று மாலை கூடுகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இன்றையகூட்டத்தில் தமிழக, கர்நாடக, பாண்டிச்சேரி மற்றும் கேரள முதல்வர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லைஎன்றால், பிரதமர் தனது முடிவை அறிவிப்பார்.

காவிரி நதி நீர் பங்கீடு விஷயத்தில் வாஜ்பாய் எடுக்கும் எந்த முடிவையும் எங்கள் முடிவாகவே கருத வேண்டும்என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த இரு முறையும் காவிரி ஆணையக் கூட்டம் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. ஒருமுறைஜெயலலிதாவும் இன்னொரு முறை ரங்சாமியும் கடைசி நேரத்தில் கலந்து கொள்ளாமல் போனதால் கூட்டம்நடக்காமல் போனது.

இந் நிலையில் இன்று எல்லா முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வதால் இக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம்பெற்றுள்ளது.

தனி விமானத்தில் சொகுசு:

டெல்லிக்கு தினமும் சென்னையில் இருந்து 2 விமானங்கள் இருந்தும் அவற்றைப் புறக்கணித்துவிட்டு தனி விமானத்தில் முதல்வர்ஜெயலலிதா சென்றுள்ளார். இதை திமுக தலைவர் கருணாநிதி வன்மையாக கண்டித்துள்ளார்.

அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறிவிட்டு, மாவட்டந்தோறும் ஆடம்பர விழாக்களை நடத்துவதையும்,டெல்லிக்குச் செல்ல காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என இரண்டு விமானங்கள் இருந்தும், தனியார் விமானத்தைவாடகைக்குப் பிடித்து அதில் தனியாக டெல்லி செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இதைப் பார்க்கையில், தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறது என்று பைத்தியக்காரர்கள் கூட கூறமாட்டார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+