ஜெயலலிதாவுடன் கருணாநிதியை ஒப்பிடாதீர்கள்: வைகோ
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதியைக் கைது செய்ததன் மூலம் சட்டமன்றத்தின் அதிகாரத்தைநீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ இன்று காலைசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா எதையும் மிச்சம் வைக்கவில்லை. பரிதி கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெயலலிதாவின்சர்வாதிகாரத்தனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
பரிதி மீதான கிரிமினல் நடவடிக்கை இப்போது நீதிமன்றத்திற்கு வந்து விட்டது. இதன் மூலம் சட்டமன்றத்தின்அதிகாரம் நீதிமன்றத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அவமானம்.சட்டமன்றமும் நீதிமன்றமும் தனித்தனி அமைப்புகள். அவை ஒன்று ஒன்று ஆக்கிரமிக்கக் கூடாது.
ஆனால், ஜெயலலிதா சட்டமன்றத்தின் அதிகாரத்தை நீதிமன்றத்திடம் சரண்டர் செய்துவிட்டார். ஜனநாயகமரபுகளை ஜெயலலிதா நாசம் செய்து வருகிறார்.
திட்டமிட்டபடி மதிமுகவினர் சாத்தான்குளம் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பார்கள். எந்த வேட்பாளருக்கும்அவர்கள் ஒட்டுப் போட மாட்டார்கள்.
கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகின்றன. இது மிகவும் தவறானது.ஜெயலலிதாவுடன் போய் ஜெயலலிதாவை ஒப்பிடாதீர்கள் என்றார் வைகோ.
இ.கம்யூ-மார்க்சிஸ்ட் போல திமுக-மதிமுக:
இதற்கிடையே பல விஷயங்களிலும் திமுகவைப் பின்பற்றி அக்கட்சி அறிவிப்பது போலவே மதிமுகவும்அறிவிக்கின்றதே என்று வைகோவிடம்ஒரு நிருபர் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த வைகோ, "இந்திய கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் வெவ்வேறு கட்சிகளாகஇருந்தபோதிலும் ஒரே கருத்துக்களைத்தான் கூறுகின்றன. அதைப் போலத்தான் நாங்களும் ஒரேகருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டுள்ளோம்".
ஜெயலலிதாவின் வெறியாட்டத்தை எதிர்த்து கலைஞர் குரல் கொடுக்கிறார். அதை நான் வழி மொழிகிறேன்.
என்னை மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உயிர் நண்பர் என்கிற வகையில் சந்தித்தார். எனது போராட்டம்தொடரட்டும் என்று வாழ்த்தினார்.
நான் இந்த வழக்கில் ஜாமீன் கேராவே மாட்டேன் என்றார் வைகோ.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications